
கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
கறிவேப்பிலை நம் சமையலில் முக்கிய இடம் பிடிக்கிறது. இதன் நறுமணத்திற்காக சமையலில் அதிகம் பயன்படுத்தினாலும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
இதில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடுகிறது. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் சருமத்தை உயிர் சத்துடன் இருக்க உதவுகிறது.
கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள் பற்றி பார்ப்போம்.
100 கிராம் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
ஆற்றல் : 108 kcal
புரதம் : 6.1 gram
பைபர் : 6.4 gram
பாஸ்பரஸ் : 57 mg
கால்சியம் : 830 mg
இரும்பு : 0.93 mg
மெக்னீசியம் : 44 mg
கரோட்டின் : 7560 μg
நியாசின் : 2.3 mg
வைட்டமின் சி : 4 mg
போலிக் அமிலம் : 23.5 μg
இதையும் படிங்க: பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: பூண்டு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?
இரத்த சோகையை தடுக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
கறிவேப்பிலையில் இரும்பு சத்து, போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளது. போலிக் அமிலம் உணவில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்சி உடலுக்கு கொடுப்பதற்கு உதவி புரிகிறது. இதில் இரண்டு சத்துக்களும் நிறைந்துள்ளதால் இயற்கையான முறையில் உங்கள் இரத்த சோகையை போக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டும் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலை சாப்பிடுவதால் இன்சுலின் செயல்பாட்டை சீராக்கி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவை குறைப்பதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. இயற்கை முறையில் சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவோர் தினமும் காலையில் கருவேப்பிலை சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.
செரிமானத்தை அதிகரிக்க
கருவேப்பிலை செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. இது உடல் எடை குறைய வழி செய்கிறது. உடல் எடை அதிகரிப்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்பதால் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
கொழுப்பை குறைக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
தினசரி உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதால் இரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்கும் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் LDL கெட்ட கொழுப்பை குறைத்து HDL நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.
முடி உதிர்தலையும், இளநரையையும் குறைக்கிறது
கறிவேப்பிலை இளநரையை தடுக்கிறது. முடி உதிர்தலையும் தடுக்கிறது. மெலிந்த கூந்தலுக்கு வலிமை சேர்க்கிறது. தலை முடி வேர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து முடி உதிர்வதை தடுக்கிறது. கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன் அடையாளம்.
இதையும் படிங்க: Hair fall reason in Tamil-தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள்:
புற்றுநோய் வராமல் தடுக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பினோல்கள் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் இருப்பது நல்ல பலன் கொடுக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
பல்லுக்கு கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
கறிவேப்பிலையில் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக உள்ளதால் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. கறிவேப்பிலை எண்ணெய் ஈறுகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. வாய் நாற்றத்தையும் போக்குகிறது. மேலும் நுண்ணுயிர்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியத்தை காக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
இதில் உள்ள அதிகப்படியான அல்கலாய்டுகள் பல இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலை மன அழுத்தத்தை குறைத்து இதய அமைதியை அதிகரிக்கிறது. இது இதய படபடப்பை குறைக்கிறது. கறிவேப்பிலையை தினசரி சாப்பிடுவதால் இதய தசைகளை வலுப்படுத்துகிறது. இரத்தத்தில் உண்டாகும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.இது மாரடைப்பு மற்றும் இரத்த கட்டிகள் வருவதையும் தடுக்கிறது.
மூளை செயல்பாட்டை அதிகரிக்க
கறிவேப்பிலை மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள பயோஆக்டிவே கூறுகளின் தன்மை மூளை ரசாயனங்கள் glutathione reductase (GRD), glutathione peroxidase (GPx), மற்றும் superoxide dismutase (SOD) உள்ளிட்ட நினைவகங்களை அதிகரிக்க செய்கிறது. ஆகையால் இது உங்களின் நினைவாற்றல், கவனம், சிந்தனை, விவேகத்திறன் இவற்றை அதிகரிக்கிறது. ஆகையால் தினசரி உங்கள் உணவில் கறிவேப்பிலையை தவறாமல் சேர்த்துக் கொள்வது சிறந்த டானிக் மற்றும் நல்ல தூண்டுதலாகவும் இருக்கிறது. இது அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்கள் வராமல் தடுக்கிறது.
சுவாச கோளாறுகளுக்கு கறிவேப்பிலையின் நன்மைகள்
இதில் அதிகமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் expectorant பண்புகள் சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது மூக்கில் இருந்து ஒழுகும் சளி மற்றும் நீர் இவற்றை தடுக்கிறது. இது சைன்ஸ், தலைவலி, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி இவற்றிக்கு சிறந்த நிவாரணம் அளிக்க உதவுகிறது.
கறிவேப்பிலை பொடி பயன்கள்
பச்சையாக பறித்த கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து நன்கு உலர்த்தி பொடியாக அரைத்து சலித்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
- தினமும் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாக குறைய செய்யும்.
- பொடியை ஒரு ஸ்பூன் அளவு மோரில் கலந்து குடிப்பதால் இரைப்பை குடல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
- கறிவேப்பிலை வேர் பொடி சேர்த்து கொண்டால் சிறுநீரக கோளாறுகள் சரியாகும் என்று கூறப்படுகிறது.
கறிவேப்பிலை சாறு நன்மைகள் மற்றும் செய்முறை

தேவையான பொருட்கள்:
- பச்சை கறிவேப்பிலை : ஒரு கைப்பிடி
- புதினா இலைகள் : தேவையான அளவு
- தண்ணீர் : 3 டம்ளர்
- எலுமிச்சை : பாதி அளவு
- இலவங்கப்பட்டை பொடி : ஒரு ஸ்பூன்
- சுத்தமான தேன் : 2 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கறிவேப்பிலை, புதினா, இலவங்கப்பட்டை இவற்றை போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்த பிறகு அதை வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய சாறில் எலுமிச்சை சாறும் தேனையும் கலக்க வேண்டும்.
ஒரு கிளாசில் சாற்றை ஊற்றி சூடாக இருக்கும் போதே பருகவும்.
கறிவேப்பிலை சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினசரி இந்த சாறு குடித்து வந்தால் நல்ல நம்பிக்கைக்குரிய பலன் அடையாளம்.
கறிவேப்பிலை பக்க விளைவுகள்:
இதிலும் மற்ற மூலிகைகளை போலவே சில ஒவ்வாமைகளும் இருக்கின்றன. எனவே மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்வது சிறந்த ஆரோக்கிய நன்மைகளை தரும். அலர்ஜி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
முக்கிய குறிப்பு : இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.