
சப்ஜா விதை நன்மைகள்
திருநீற்று பச்சிலை மூலிகை செடியில் இருந்து எடுக்கப்படும் விதைகள்தான் சப்ஜா விதை ஆகும். சப்ஜா விதை மற்றும் சாலியா விதை இரண்டும் ஒன்று என்று நினைப்பவர்களுக்கு ஒரு உண்மை என்னவென்றால் இரண்டு விதைகளும் வெவ்வேறு விதைகளாகும். சப்ஜா விதை கருப்பு நிறத்தில் இருக்கும். சப்ஜா விதை பயன்கள் பற்றி பார்ப்போம்.
சப்ஜா விதை நன்மைகள்
- உடல் எடையை குறைக்கிறது.
- மலச்சிக்கலை போக்கும்.
- உடல் சூட்டை தணிக்கும்.
- வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற்றும்.
- நீரிழிவை கட்டுப்படுத்தும்.
- கொழுப்பை குறைக்கும்.
உடல் சூட்டை குறைக்க: சப்ஜா விதை நன்மைகள்
கொளுத்தும் கோடை வெயிலின் வெப்பத்தை சமாளிக்க சப்ஜா விதை உதவியாக இருக்கும். சப்ஜா விதை உங்கள் உடல் உஷ்ணத்தை தணிக்கும் செயலை செய்வதால் குளிர்பானங்கள், சர்பத், மோர் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது.
மலச்சிக்கல் தீர: சப்ஜா விதை நன்மைகள்

சப்ஜா விதை உங்கள் குடல் இயக்கங்களை மென்மையாக்குகிறது. தினசரி இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் சிறிது சப்ஜா விதைகளை போட்டு குடிக்கவும். இதில் உள்ள எண்ணெய் தன்மை இரைப்பை குழாயில் உள்ள வாயுவை வெளியேற்றுகிறது.
சப்ஜா விதைகள் நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கலை போக்குவதுடன் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று கடுப்பு இவைகளையும் சரியாக்குகிறது.
உடல் எடை குறைய

சப்ஜா விதைகளில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

ஆய்வுகளின் படி, சப்ஜா விதைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் ஒரு நாள் முழுவதற்குமான இன்சுலின் அளவை அதிகப்படுத்தும்.
இதையும் படிங்க: சூரியகாந்தி விதை நன்மைகள்: ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
சரும பாதுகாப்பிற்கு
சப்ஜா விதைகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகமாக உள்ளதால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகின்றது.
ஒரு ஸ்பூன் சப்ஜா விதை பொடியையும் தேங்காய் எண்ணையையும் கலந்து அரிப்பு, படை, சொறி உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
முடி வளர்ச்சிக்கு

திருநீற்று பச்சிலை துளசி விதைகளில் (சப்ஜா விதை) உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி உதிர்வதையும் தடுக்கிறது. சப்ஜா விதைகள் மற்றும் நெல்லிக்காய் பொடி இரண்டையும் சம அளவு கலந்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தலை முடியில் தடவவும். சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.
முக்கிய குறிப்பு : இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Flax seed/Aali vithai/ஆளி விதை வாங்க
halim seeds / saliya vithai – சாலியா விதை வாங்க
pumpkin seeds / poosani vithai / பூசணி விதை வாங்க
I like the efforts you have put in this, regards for all the great content.
I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.
There is definately a lot to find out about this subject. I like all the points you made