சூரியகாந்தி விதை நன்மைகள்
உங்கள் தினசரி உணவு முறைகளில் விதைகள் மற்றும் நட்ஸ்களை சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும். ஏனென்றால், அவை சத்தானவை, ஆரோக்கியமான மற்றும் உங்கள் நாள்பட்ட நோய்களிலிருந்து காக்கிறது.
சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
சூரியகாந்தி விதைகள் வீக்கம், நீரிழிவு – 2, இதயநோய்கள் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
பொதுவாக சூரியகாந்தியில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று எண்ணைக்காகவும் மற்றொன்று விதைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சூரியகாந்தி விதை நன்மைகள் பற்றி பார்ப்போம்.
Nutrition content of sunflower seeds
சூரியகாந்தி விதைகள் சிறியதாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்தது. உங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அவற்றில் அடங்கியுள்ளன.
குறிப்பாக வெள்ளை விதைகளில் வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய செல்களின் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து காக்கிறது.
இந்த விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் நாள்பட்ட நோய்களும் வராமல் தடுக்கிறது. இதில் பினோலிக் அமிலம் மற்றும் flavonoids- ம் உள்ளன.
30 grams வறுத்த சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:
கலோரிகள் : 163
கொழுப்புகள் : 14 grams
புரதம் : 5.5 grams
கார்போஹைட்ரேட் : 6.5 grams
பைபர் : 3 grams
வைட்டமின் ஈ : 37% of the RDI
நியாசின் : 10% of the RDI
வைட்டமின் பி6 : 11% of the RDI
இரும்பு : 6% of the RDI
மெக்னிசியம் : 9% of the RDI
துத்தநாகம் : 10% of the RDI
சூரியகாந்தி விதை நன்மைகள்: Sunflower seeds benefits for inflammation
இந்த விதைகள் வீக்கத்தை குறைக்கிறது. இதய நோய்கள் மற்றும் நீரிழிவு 2 போன்ற பல நாள்பட்ட நோய்களை குறைக்கிறது. 6000 பெரியவர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், சூரியகாந்தி விதைகள் மற்றும் சில விதைகளை சேர்த்து சாப்பிடுபவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது C – reactive புரதம் 32 சதவிகிதம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
விதைகளின் அதிகப்படியான நன்மைகளுக்கு இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஈ என்று நம்பப்படுகிறது.
சூரியகாந்தி விதை நன்மைகள்: Sunflower seeds benefits for heart disease
சூரியகாந்தி விதைகளில் இரத்தக்குழாய் சுருக்கங்களை உண்டாக்கக்கூடிய நொதிகளை அழிக்கக்கூடிய கலவை உள்ளது. இது இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
விதைகளில் உள்ள மெக்னீசியம் தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
How to eat sunflower seed for diabetes
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக அவசியம். இதற்கு சூரியகாந்தி விதைகள் உதவியாக இருக்கின்றன.
பல ஆய்வுகளில் இந்த சிறிய விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி ஒரு கைப்பிடி அளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் 10 சதவிகிதம் உணவிற்கு முன் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறையும். இது அடிப்படையில் தாவர கலவை chlorogenic அமிலத்தால் உண்டாகிறது.
Sunflower seeds for immunity system
சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம் உள்ளதால் உங்கள் உடலில் 300 என்சைம்களை உருவாக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இதில் செலினியம் மற்றும் பிற வைட்டமின்கள் இருப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் தொற்று நோய்களை எதிர்த்து பாதுகாக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கிறது.
நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உள் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏற்படுத்துகிறது.
Reduce the risk of cancer
உலக அளவில் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. புற்றுநோய் உயிரணுக்களை முழுமையாக அழிக்க எதுவும் இல்லை என்றாலும் உங்கள் ஊட்டச்சத்துள்ள உணவு முறைகள் வராமல் தடுக்கலாம்.
சூரியகாந்தி விதைகளில் beta-sitosterol, phytosterol இருப்பதால் மார்பக புற்று உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இந்த விதைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்று ஏற்படுவதையும் தடுக்கிறது.
Reduces cholesterol
sunflower seeds-ல் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு அல்லது LdL கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நியாஸின் அல்லது வைட்டமின் பி 3 உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
இந்த விதைகளில் உள்ள வைட்டமின் பி 5 HDL கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
Increase brain funtion
இந்த விதைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் மூளையின் செயல்திறன் மற்றும் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் பி6 உங்கள் மனநிலையை அமைதியாகவும் நல்ல நினைவாற்றலையும் சிறந்த கவனிப்பு திறமையையும் அதிகரிக்க உதவுகிறது.
இதை உணவில் சேர்க்கும் பெண்களின் மாதவிடாய் வருவதற்கு முன் வருகின்ற நோய்கள் (PMS) குறைகிறது.
How to eat sunflower seed: Good for the skin
இந்த விதைகளில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளானை எதிர்க்கும் தன்மை உங்கள் முகத்தில் முகப்பரு வராமல் சருமத்தை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைக்கிறது.
சூரியகாந்தி விதைகளில் உள்ள Oleic மற்றும் Linoleic அமிலம் collagen உருவாவதற்கு உதவுகிறது. இது வயதான தோற்றத்தை குறைத்து சருமத்தை இளமையுடன் இருக்க செய்கிறது.
Are there any side effects from eating sunflower seeds?
பொதுவாக சூரியகாந்தி விதைகள் உங்கள் உடலுக்கு நன்மை என்றாலும் சிலருக்கு ஒவ்வாமை உண்டாக்கலாம். சூரியகாந்தி விதைகளை உட்கொண்டால் உண்டாகும் பக்க விளைவுகளை பற்றி பார்ப்போம்.
சிறிய வெள்ளை விதைகளில் கால்சியம், கலோரிகள் அதிகம் அதேபோல் சோடியம் அதிக அளவில் உள்ளது. நீங்கள் சோடியம் மற்றும் கலோரி அளவுகளுக்காக சிகிச்சை பெறுபவர் என்றால் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது அவசியம்.
சிறிய விதைகள் பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டுள்ளது. அதே சமயம் காட்மியம் அதிகமாக உள்ளது. ஆகையால் அதிகமாக விதைகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும். சராசரியாக 70 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு 490 micrograms அளவுக்கு மிகாமல் காட்மியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நீங்கள் விதைகளை மேல் உள்ள ஓட்டுடன் சாப்பிடுவதால் ஏற்படும். சிலர் வேண்டுமென்றே ஓட்டுடன் சாப்பிடுவார்கள் இது செரிமானத்திற்கு கடுமையாக இருக்கும். அதேபோல அதிகமாக விதைகளை எடுத்துக் கொண்டால் வாந்தி கூட உண்டாக்கலாம்.
சிலர் சூரியகாந்தி விதைகளை உட்கொண்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வாயில் அரிப்பு, தோல் வெடிப்பு, புண்கள், வாந்தி போன்றவை ஏற்படலாம்.
The perfect way to eat sunflower seeds
இரண்டு வகையான சூரியகாந்தி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஓட்டுடன் ஒரு விதையும் ஓடு நீக்கிய ஒன்றும் கிடைக்கின்றன. இதில் ஓட்டுடன் இருப்பதை ஓடு நீக்கியபின் சாப்பிடலாம். ஓடு இல்லாமல் வாங்கினால் அப்படியே சாப்பிடலாம். ஓடு நீக்கிய விதைகள் மற்ற உணவுப் பண்டங்களுடன் சேர்த்து சாப்பிட எளிதாக இருக்கும். இதை வறுப்பதால் இதில் உள்ள வேதிப்பொருட்கள் நீங்கிவிடும். ஒருவர் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
முக்கிய குறிப்பு : இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Pingback: Benefits of garlic for men: Does Garlic Increase Sexual Motivation?
Pingback: சப்ஜா விதை நன்மைகள்: உடல் எடை குறைய
Ι dugg ѕome oof ʏou post as Ι tһought they werе very
beneficial extremely helpful.
my blog post: highest payout online casino australia