திரிபலா நன்மைகள் – Thiripala benefits in tamil

திரிபலா நன்மைகள் – Thiripala benefits in tamil
நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்த கூடிய மருந்தாக நம் திரிபலா சூரணம் (thiripala sooranam) இருக்கிறது. இது உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, வலிகளுக்கு சிகிச்சையளித்தல் போன்ற பல பிரச்சைனக்கிகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது.
திரிபலா சூரணம் என்றால் என்ன? – what is thiripala sooranam?
கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் இவை மூன்றின் கலவையில் செய்யப்படும் பொடிவகை(chooranam) ஆகும்.
திரிபலா சூரணம் செய்வது எப்படி? how to prepair thiripala sooranam?
கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் இவை மூன்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து பின் நன்கு பொடி செய்து டப்பாவில் காற்று புகாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
கடுக்காயை எடுத்து லேசாக உடைத்தால் உள்ளே கொட்டை இருக்கும். அந்த கொட்டையை பயன்படுத்தக்கூடாது. இஞ்சிக்கு தோல் விஷம் என்பது போல் கடுக்காய்க்கு உள்ளே உள்ள விதை விஷம். ஆகையால் கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தான்றிக்காயிலும் உள்ளே உள்ள விதையை எடுத்து விட்டு தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
1.கடுக்காய் உடலின் நச்சுத்தன்மையை அகற்றி உடல் எடையை குறைக்க செய்கிறது.
2.தான்றிக்காய் சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றது மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்துகிறது.
3.நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அஸ்வகந்தா பயன்கள் – ashwagandha benefits for health
திரிபலாவின் நன்மைகள் – Thiripala benefits in tamil :
உடல் எடையை குறைக்க – Thiripala for weight loss :
திரிபலா உடல் எடையை குறைப்பதில் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். இது உடலில் உள்ள கோலிசிஸ்டோகினின் ஹார்மோனின் சுரப்பை ஊக்குவித்து செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.
வயிற்று கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கிறது.
ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் கலக்கி குடிக்கலாம்.
உடலின் நச்சுத்தன்மையை குறைக்க – To reduce the toxicity of the body :
திரிபலா சூரணம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மையை அழிக்க கூடியது.
இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றக்கூடியது.
திரிபலாவில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க – thiripala sooranam for immunity power :
கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்த கலவையான திரிபலா பொடியானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இது உடலில் உள்ள பாக்டிரியா, ஈ மற்றும் கொசு போன்றவற்றால் உண்டாகும் நோய்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதன் மூலம் உடலின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் உடலை புதுப்பிக்கிறது.
பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க – thiripala for teeth :
திரிபலாவின் வலுவான ஆன்டிமைக்ரோபியல் தன்மையானது பல் ஈறு அலர்ஜி, வாய் புண், பல் ஆட்டம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சூரணத்தை ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் ஈறு அலர்ஜி மற்றும் வாய் புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும் என்பது நிருபிரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்களை பாதுகாக்க – thiripala for eye :
திரிபலா கண்களுக்கு ஒருசிறந்த மருந்தாகும். நல்ல கண் பார்வையை பராமரிக்க உதவுகிறது.
கண் சிவத்தல், வெண்படலம், கண்புரை போன்ற கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
கணினி அதிகம் பயன்படுத்துபவரின் கண்களை பாதுகாக்க உதவுகிறது.
திரிபலா சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து சிறிது நேரம் கழித்து பருத்தி துணியால் வடிகட்டி அந்த நீரால் கண்களை கழுவிவர நல்ல பலன் கிடைக்கும்.
அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…!
திரிபலா பக்கவிளைவுகள் – thiripala side effects :
சூரணத்தை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது.
தனி நபர் யாரும் மருத்துவரின் அறிவுறுத்துதலின் அடிப்படையில் மட்டுமே திரிபலாவை எடுக்க வேண்டும்.
திரிபலாவை சரியான அளவு மற்றும் எடுக்க வேண்டிய முறைகளின்படி எடுத்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Pingback: Amla benefits, Amla for hair, Amla powder benefits - RITHANYA STORES
Pingback: Arugampul Juice Benefits in tamil - RITHANYA STORES
தெரிந்தால் விட மாட்டிர்கள்..! திரிபலா சூரணம் பயன்கள்