பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: பூண்டு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?

Spread the love

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

உணவில் பூண்டு சேர்ப்பது சுவையை அதிகரிப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. நம்முடைய பாரம்பரிய வீட்டு வைத்திய முறையில் பூண்டு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூண்டு ட்ரிகிளிசரைடுகளை குறைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் குறைத்து உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

இது நல்ல பாலுணர்வை அதிகரிக்க செய்கிறது. பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

What you need to know about garlic

பூண்டு மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இது மசாலா மற்றும் சுவையூட்ட கூடிய பொருளாக மட்டும் இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதன் தனித்துவமான மணம் மற்றும் சுவை உலக அளவில் ஆசிய, ஐரோப்பிய முதல் லத்தீன் அமெரிக்க வரை பல உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: 30 grams வறுத்த சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

Garlic its relation with sexual drive

பூண்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு பாலியல் உணர்வையும் அதிகரிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதற்கு காரணம் பூண்டில் அல்லிசின் கலவை உள்ளதே ஆகும்.

இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் இது ஒரே நாளில் பலனை பெற முடியாது. குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு தினசரி சாப்பிட்டால் மட்டும் குறிப்பிட தக்க பலனையும் ஆண்மையையும் அடைய முடியும்.

Benefits of garlic for men: பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இதில் வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பூண்டு இருதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய இடம் பிடிக்கின்றது. பூண்டில் உள்ள அல்லிசின் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

பூண்டின் அதிகப்படியான நன்மையை அடைய பச்சையாக உட்கொள்ளலாம், அல்லது பூண்டு சூப், பூண்டு குழம்பு, பூண்டு சட்னி போன்ற உணவு பண்டங்களில் சேர்த்து சாப்பிடலாம்.

Benefits of garlic for women: பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

பூண்டு பெண்களின் உணர்ச்சியை அதிகரிக்கும் செயலை செய்கிறது. இது ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவு என்பதால் பெண்களின் பாலியல் ஹார்மோன்கள் அதிகரிக்க செய்கிறது. 

சந்தையில் பல supplements கிடைக்கின்றன. அதில் சரியானவை எவை என்று பார்த்து சரியான அளவு தினசரி எடுத்துக் கொண்டால் நல்ல பலன் அடையலாம்.  

Conclusion

ஆண் மற்றும் பெண் இருபாலரின் உணர்ச்சிகளை அதிகரிப்பதற்கான பண்புகளை அதிகம் கொண்டுள்ளது. ஆகையால் தினசரி சரியான அளவு பூண்டை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனை தரும். அதோடு மட்டும் இல்லாமல் தம்பதிகளுக்கிடையே ஒரு நல்ல புரிதலையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


Spread the love

2 thoughts on “பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: பூண்டு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *