Adathoda Benefits in Tamil
Adathoda Benefits in Tamil
What Is Adathoda?
Adathoda பாடாத தொண்டையையும் பாட வைக்கும் சிறப்பு பெற்ற ஒரு அற்புதமான மூலிகையாகும்.
இது சளி, இருமல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய மூலிகைகளில் ஆடாதொடைக்கு இணையாக ஒரு மூலிகையை கூற முடியாது.
ஆடாதோடை இலையானது மா இலைகளை போன்று சற்று நீளமான வடிவில் மென்மையாக இருக்கும். ஆடு இந்த ஆடாதோடை இலையை தொடாது என்ற காரணத்தினால் இதற்கு ஆடாதோடை என்ற காரணப்பெயரால் அழைக்கப்படுகிறது.
What is the use of Adathoda?
இருமலைத் தணிக்கும்.
கோழையை இளக்கி கரைக்கும்.
சிறுநீரை பெருக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்.
குரலை இனிமையாக்கும்.
தொண்டை கட்டு, கரகரப்பு இவைகளை போக்கும்.
How to use Adathoda?
ஆடாதோடை இலை (சிறுசிறு துண்டுகளாக ) – 100 கிராம்
அரிசித்திப்பிலி – 25 கிராம்
தாளிசபத்திரி – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
இவைகள் அனைத்தையும் இடித்து ஒன்று சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி கால் பங்காக சுண்ட காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து வேளைக்கு 100 மி.லி வீதம் தினமும் 3 வேளை குடித்தால் இருமல், இரைப்பு, ஆஸ்துமா மற்றும் மூச்சு திணறல் குணமாகும்.
கடுக்காய் பயன்கள் – kadukkai podi benefits in tamil
Adathoda Benefits (justicia adhatoda) for Asthma
ஆடாதோடை இலைகளை உலரவைத்து சுருட்டு போல சுருட்டி சுருட்டு குடிப்பது போன்று புகை பிடித்து வந்தால் ஆஸ்துமாவிற்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
கிராமப்புறங்களில் ஆடாதோடை இலையை இவ்வாறு உபயோகிப்பது வழக்கமான ஒன்றாகும்.
What is Adathodai Manappagu?
ஆடாதோடை இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயம் பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கரைத்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் இட்டு காய்ச்சி பாகு பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் அதுவே ஆடாதோடை மணப்பாகு ( Adathoda Manappagu ) ஆகும்.
ஆடாதோடை மணப்பாகு 2 முதல் 3 ஸ்பூன் அளவு எடுத்து சம அளவு சுடு தண்ணீர் சேர்த்து தினமும் 2 அல்லது 3 முறை குடித்து சிறிது சிறிதாக விழுங்கி வர இருமல் – இளைப்பு – இரைப்பு – நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
Adathoda Benefits for Kids
ஆடாதோடை இலைச் சாற்றை சரசம் செய்து சம அளவு தேன் சேர்த்து கால் அல்லது அரை ஸ்பூன் அளவு குழந்தைகளுக்கு தினசரி 2 அல்லது 3 வேளை கொடுத்து வந்தால் இருமல், சளி, கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
Adathoda Side Effects
ஆடாதோடை எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாத சிறப்பான மூலிகையாகும். இருந்தாலும் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவதே சிறப்பான முறையாகும்.
Pingback: Hair fall reason in Tamil - RITHANYA STORES