Amla benefits, Amla for hair, side effects, dosage
நெல்லிக்காய் (Amla) வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கரோட்டின், இரும்பு, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காய் சாறு பயன்கள் – Amla Juice Benefits :
- உடல் சூட்டை குறைக்கும்.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- ஜீரணத்தை அதிகரிக்கும்.
- மலச்சிக்கலை போக்கும்.
- முடி உதிர்வை போக்கும்.
- இரத்தத்தை சுத்திகரிக்கும்.
- ஆயுளை அதிகரிக்கும்.
- இளமையை காக்கும்.
- தோல் பிரச்சனைகளை சரியாக்கும்.
- எலும்புகளை வலுவாக்கும்.
- நீரிழிவு நோய்க்கு சிறந்தது.
- நெஞ்செரிச்சலை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க – Amla Juice For Weight Loss
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு லிப்போபுரோட்டீன் கொழுப்பை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நெல்லிக்காயில் குரோமியம் அதிகம் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
இளமையை காக்க நெல்லிக்காயின் பயன்கள் – Amla benefits for anti-aging :
நெல்லிக்காயில் அதிகப்படியான ஆக்சிஜனேற்ற தன்மைகள் இருக்கிறது. ஆகையால் நம் உடலில் வயதான தோற்றத்தையும் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்ற கெட்ட செல்களை அழித்து நம் இளமையை காக்கின்றது.
செரிமான பிரச்சனைகளை சரியாக்க – Amla benefits for digestive problems :
நெல்லிக்காயில் நார்ச்சத்து இருப்பது நம் அனைவரும் அறிந்த விஷயம். ஆகையால் நெல்லிக்காய் நம் குடலில் செரிமான சக்தியை சீராக்குகிறது. அனைத்து குடல் பிரச்சனைகளையும் சரிசெய்கிறது மற்றும் குடல் இயக்கத்தை சீராக்குகிறது. எனவே மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் இல்லாமல் நலமாக வாழலாம்.
இதயத்தை காக்க நெல்லிக்காயின் பயன்கள் – Amal benefits for heart :
எவர் ஒருவர் தினமும் ஒரு நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காயை சாப்பிட்டு வருகிறாரோ அவருக்கு இதய சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் வராது. நெல்லிக்காய் நம் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் கெட்ட கொழுப்பு சேராமல் நம் உடலை காக்கிறது. ஆகையால் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்காது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த – Amla benefits for diabetes :
நெல்லிக்காயில் குரோமியம் நிறைந்துள்ளது. ஆகையால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் செயல்படுகிறது என்று சர்வதேச உணவு மற்றும் ஊட்டச்சத்து இதழ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
திரிபலா நன்மைகள் – Thiripala benefits in tamil
முடி உதிர்வை குறைக்க – Amla benefits for hair fall :
தலைமுடி வளர்ச்சிக்கான சிறந்த அமுதம் என்றே நெல்லிக்காயை சொல்லலாம். நெல்லிக்காயில் அதிகப்படியான இரும்பு சத்து, ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இவை அனைத்தும் முடி வேர் பகுதிக்கு வலுவூட்டி முடி உதிர்வை தடுக்கிறது.
மனஅழுத்தத்தை குறைத்து நன்கு உறக்கத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தி பொலிவை உண்டாக்குகிறது.
வறண்ட சருமத்தை காக்க – Amla benefits for dry skin :
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி – ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் நம் தோல்களில் பாதிப்பு ஏற்படுத்துகின்ற செல்களை அழிக்கிறது. இறந்த செல்களை நீக்குகிறது. தோல்களுக்கு தேவையான இயற்கையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.
தினம் ஒரு நெல்லி சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படுகின்ற வறட்சியை போக்கி மென்மையாக வைத்துக்கொள்ளும்.