Arugampul Juice Benefits in Tamil
Arugampul Juice Benefits
நமது நாட்டில் இப்பொழுது நம் பாரம்பரியமான மருத்துவ முறைகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
பக்க விளைவுகள், பின்விளைவுகள் ,இல்லாத நம் மருத்துவ முறைகளை பெரிதும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சித்த மருத்துவத்தில் மூலிகைகள் மூலம் நோயை குணப்படுத்தி கொள்ள முடியும், நரை, திரை, மூப்பு இன்றி உடலை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இந்த முறைக்கு காயகற்ப முறை என்று பெயர்.
அருகம்புல் தரையில் படரும் கொடி இனத்தை சார்ந்தது, இது எப்படிப்பட்ட வறட்சியிலும் வளரக்கூடியது. இளைத்த உடம்பை தேற்ற பாதுகாக்க இது ஒரு அற்புதமான மூலிகையாகும்.
அருகம்புல்லில் நார்ச்சத்து, புரத சத்து, சாம்பல் சத்து, நைட்ரஜன், சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், கந்தக சத்து என்று பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
இப்பொழுது பரவலாக அருகம்புல் சாறு மற்றும் அருகம்புல் குடிநீர் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அருகம்புல் சாறு குடித்தால் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலச்சத்து (hyperacidity) கட்டுப்படுத்தப்படுகிறது.
வயிற்றுப் பொருமல், வாய்வு, அஜீரணம் ஆகியவற்றை நீக்கிப் பசியைத் தூண்டுகிறது. மலச் சிக்கலை நீக்குகிறது. போதைப்பொருள் உட்கொள்பவர்களுக்கு ஏற்படக்கூடிய நச்சுத்தன்மையை மாற்றி போதை பொருளை பயன்படுத்தும் எண்ணத்தை மறக்க செய்துவிடும்.
திரிபலா நன்மைகள் – Thiripala benefits in Tamil
Arugampul Juice Benefits – அருகம்புல் சாறு நன்மைகள் :
- ரத்தத்தை அதிகரிக்கும்.
- உடல் எடையை குறைக்கும்.
- பல் ஈறுகளை வலுவாக்கும்.
- நீரிழிவை கட்டுப்படுத்தும்.
- மலச்சிக்கலை போக்கும்.
- ரத்தத்தை சுத்திகரிக்கும்.
- நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்..
- மாரடைப்பை தடுக்கும்.
- சிறுநீர் பிரச்சனைகளை சரிசெய்யும்.
- இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- தோல் நோய்களுக்கு சிறந்தது.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க :
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான குளோரபில், பிராணவாயு, புரதம், தாது உப்புகள் ஆகியவை இதில் ஏராளமாக அடங்கி உள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இரத்தத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகளோடு அருகம்புல் சாறு தினசரி சேர்த்து கொடுத்தால் நல்ல பலன் கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
உடல் எடை குறைய அருகம்புல் சாறு :
அருகம்புல் சாறு தினசரி குடிப்பதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை. அதற்கு மாறாக உடலில் உள்ள ஊளைச் சதையும் தொந்தியும் குறைந்து உடலுக்கு தேவையான சுறுசுறுப்பை கொடுக்கிறது.
அருகம்புல் சாறு செய்முறை :
பச்சை அருகம்புல்லை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக்கி தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி தினசரி காலை வெறும் வயிற்றில் 100ml வீதம் குடிக்கலாம். அல்லது அருகம்புல்லுடன் நிறைய தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அருகம்புல்லின் நிறம் மாறும் போது இறக்கி வடிகட்டி சிறிது மிளகுத்தூள் சேர்த்து பருகலாம்.
தோல் நோய்களுக்கு அருகம்புல் சாறு பயன்கள் :
அருகம்புல் சாறு தினமும் அருந்தினால் உடலில் ஏற்படும் அரிப்பு தடிப்பு அலர்ஜி நீங்கும். அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளில் பூசினால் சரியாகும்.