அஸ்வகந்தா பயன்கள் – ashwagandha benefits for health

Spread the love

அஸ்வகந்தா பயன்கள் – ashwagandha benefits for health

அஸ்வகந்தா பயன்கள் - ashwagandha benefits for health

அஸ்வகந்தா என்ற அற்புத மூலிகையானது மனித குலத்திற்கு கிடைத்த சிறந்த பரிசாகும். பல நூற்றாண்டுகளாக நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களின் அன்றாட துயரங்களான மனஅழுத்தம், பதட்டம், சோர்வு, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

ஆக்சிஜனேற்றிகள், இரும்பு மற்றும் அமினோஅமிலங்கள் அதிகமாக இருப்பதால், ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அஸ்வகந்தா மிகவும் சக்திவாய்ந்த மூலிகையாக விளங்குகிறது.

உடலை மீட்டெடுத்து நீண்ட ஆயுளை அதிகரிக்கின்றது. ஒரே நேரத்தில் உற்சாகத்தையும் அமைதியையும் தரக்கூடியது.

அஸ்வகந்தா என்றால் என்ன? – What is Ashwagandha?

தமிழில் அமுக்கிரா கிழங்கு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அஸ்வகந்தா என்பர்.

அஸ்வகந்தா என்ற சம்ஸ்கிருத சொல்லிற்கு குதிரை வாசனை என்றுபொருள். “அஸ்வ” என்றால் குதிரை என்றும் “கந்தா” என்றால் வாசனை என்றும் பொருள்படும்.

அமுக்கிரா வேர் குதிரையின் வாசனையை கொண்டிருப்பதால் அஸ்வகந்தா எனப்படுகிறது.

இந்த மூலிகையை உட்கொள்ளும் ஒருவர் குதிரை பலத்தை ஓத்திருப்பர் என்று நம்பப்படுகிறது.

இது மஞ்சள் பூக்கள் மற்றும் சிவப்பு பழங்களைக் கொண்ட ஒரு சிறிய செடியாகும். இது இந்தியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக வளரக் கூடியது.

அஸ்வகந்தா பயன்கள் – Benefits of Ashwagandha :

  1. நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.
  2. முதுமையை தடுக்கிறது.
  3. மூட்டு வலியை குறைக்கிறது.
  4. மனஅமைதியை தூண்டி தூக்கமின்மையை குறைக்கிறது.
  5. ஆண்மையை அதிகரிக்கிறது.
  6. கீல்வாதம் சரியாக உதவுகிறது,
  7. குழந்தையின்மையை குறைக்கிறது.

அமுக்குராவின் இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது.

அஸ்வகந்தா இலைகள் :

இலைகளை வலி நிவாரணி மற்றும் வைரஸ் தொற்று, இருமல் மற்றும் காய்ச்சல், நாள்பட்ட வலிக்கு சிகிச்சையளிக்க அதிகமாக பயன்படுகிறது.

அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…!

அஸ்வகந்தாவின் மலர்கள் மற்றும் விதைகள் :

பூக்கள் சக்திவாய்ந்த பாலுணர்வை கொண்டிருப்பதால் இது கருவுறுதலை அதிகப்படுத்துவதற்கும் சிறுநீரக பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

விதைகள் தொற்று நோய்களை தடுக்க பயன்படுகிறது.

அஸ்வகந்தாவின் வேர்களின் பயன்கள் – benefits of Ashwagandha roots :

அஸ்வகந்தாவின் வேர்கள்தான் மிகமுக்கியமான பக்கமாகும். இது பல்வேறு மருந்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேரின் சக்திவாய்ந்த பாலுணர்வு, நோய் எதிர்ப்பு சக்தி, மனஅழுத்தம் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் மிகுதியாக உள்ளன.

இது நரம்பியல் பிரச்சனைகள், மலசிக்கல், குழந்தையின்மை, தோல் நோய்கள் போன்றவற்றிக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

அஸ்வகந்தா பயன்படுத்தும் முறை – how to use ashwagandha :

அதாவது  அஸ்வகந்தா சூரணம் (ashwagandha chooranam), அஸ்வகந்தா லேகியம் (ashwagandha legiyam), அஸ்வகந்தா மாத்திரை (ashwagandha tablets), அஸ்வகந்தா சிரப் (ashwagandha syrup) என்று பயன்படுத்தப்படுகிறது.

அஸ்வகந்தா வேரை முறையாக புட்டு அவியல் செய்து சூரணம் செய்து உட்கொள்ளல் வேண்டும்.

ஆண்களுக்கு அஸ்வகந்தாவின் நன்மைகள் – ashwagandha benefits for men :

அஸ்வகந்தா சூரணம் (ashwagandha chooranam) சக்திவாய்ந்த விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. உயிரணுக்களின் வீரியத்தை அதிகரிக்கிறது.

இது இயற்கையான ஆக்சிஜனேற்றியாக விளங்குவதால் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் லூடினைசிங் ஹார்மோன் போன்ற போன்ற ஆண் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

ஆணுறுப்பு விறைப்புத்தன்மை மற்றும் விந்து முந்துதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

பெண்களுக்கு அஸ்வகந்தாவின் நன்மைகள் – ashwagandha benefits for women :

அஸ்வகந்தா சூரணம் பெண்களின் கருப்பையை வலிமைப்படுத்துகிறது. இது இரத்தத்தின் ஹார்மோன் அளவை பராமரிக்கிறது.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பை வலுவாக்குகிறது மற்றும் கருமுட்டைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஒரு பெண் கருத்தரிக்க முயற்சிக்கும் போது அஸ்வகந்தா சூரணத்தை தவறாமல் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

கவலை மற்றும் மனஅழுத்தத்தை குறைக்க – Reduce anxiety and stress :

மனஅழுத்தம், முதுமை போன்ற பல்வேறு வகையான மனநலபிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க அஸ்வகந்தா பெரிதும் பயன்படுகிறது.

அஸ்வகந்தா தீங்குகள் – ashwagandha side effects :

அஸ்வகந்தாவை முறையான சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *