அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…!

Spread the love

அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…!

Athimathuram Benefits in Tamil

Athimathuram Benefits in Tamil

நம் முன்னோர்கள் பெரும்பாலும் உடம்பில் வரக்கூடிய சிறுசிறு உபாதைகளுக்கு வீட்டில் உள்ள மூலிகைகளைக் கொண்டே கைவைத்தியம் செய்தனர். அந்த கைவைத்தியம் முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் ஒன்றுதான் அதிமதுரம் (athimathuram). இந்த அதிமதுரம் நம் ஒவ்வொருவர் வீட்டு சமையலறையிலும் இருக்க வேண்டியது அவசியம்.

அதிமதுரம் என்றாலே அதன் பெயருக்கேற்ப இனிப்பு சுவையுடன் கூடிய ஒரு செடியின் வேர் ஆகும். உலர்ந்த வேர்க்குச்சி நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இருமல், தொண்டைக்கட்டு, தொண்டைப்புண் (Throat Infection) (Sore Throat) போன்றவற்றிக்கு வாயில் அடக்கி வைத்துக்கொண்டு சாரத்தை விழுங்க (Throat Lozenges) உடனடி நிவாரணம் கிடைக்கும்.

அதிமதுரத்தில் கிளிசரைசின் என்ற ஆல்கலாய்டும், நிறைய அளவில் ஸ்டார்ச் என்ற சர்க்கரை சத்தும் குறைந்த அளவில் டானின் (Tanin) என்ற சத்தும் உள்ளது. அதிமதுரம் சிறந்த கருப்பை விரிவாக்கி IUD (Intra Uterine Derivative) ஆக செயல்பட வல்லது. இது கருப்பையை விரிவடையச் செய்து வயிற்றில் இறந்த குழந்தை வெளியே வர IUD (Intra Uterine Death) உதவுகிறது.

மேலும் பிரசவத்திற்கு முன் வரும் உதிரப்போக்கினை (Anti Partum Heamorrhage) நிறுத்த வல்லது.

பாடகர்களும் மேடைப்பேச்சாளர்களும் அதிமதுரத்தின் பயன் தெரிந்து வாயில் போட்டு அடக்கிக் கொள்வார்கள்.

அதிமதுரம் பயன்கள் – Athimathuram Benefits in Tamil :

  1. மார்பு சளி, இருமல் சரியாகும்.
  2. தொண்டை, ஈரல், இரைப்பை இவற்றில் உண்டாகும் வறட்சியை போக்கும்.
  3. மூலம் சரியாகும்.
  4. நரம்பு தளர்ச்சி சரியாகும்.
  5. இரத்த வாந்தி நிற்கும்.
  6. வயிற்றுப்புண், வாய்ப்புண் இவற்றை ஆற்றும்.
  7. மஞ்சள்காமாலை தீரும்.
  8. தலைவலி, ஒற்றைதலைவலி ஆகியவை தீரும்.
  9. கண்கள் ஒளிபெறும்.

கடுக்காய் பயன்கள் – kadukkai podi benefits in tamil

சிறுநீர் பிரச்னை குணமாக :

அதிமதுரத்தை வாயிலிட்டு சுவைக்க சிறுநீர் எரிச்சல் (Burning Micturation) குணமாகும். நாக்கு வறட்சி சரியாகும்.

மார்பு சளி இருமல் மற்றும் நுரையீரல் சளி குணமாக :

அதிமதுரத்தை இடித்துசலித்துசூரணம்செய்துவேளைக்கு அரை ஸ்பூன் வீதம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மார்பு, நுரையீரல் சளி சம்பந்தமான அனைத்தும் சரியாகும்.

நாட்பட்ட மலச்சிக்கலுக்கு அதிமதுரம் சூரணம்:

அதிமதுரம்         – 1 பங்கு

சோம்பு                –  1 பங்கு

நிலாவாரை        –  2 பங்கு 

இவற்றின் மொத்த எடைக்கு எடை நாட்டு சர்க்கரை சேர்த்து இடித்து சூரணம் செய்து தினமும் இரவு படுக்கும்முன் அரை முதல் ஒரு ஸ்பூன் வரை சாப்பிட்டுவர நாட்பட்ட மலச்சிக்கல் குணமாகும். மலம் தாளாரமாக வெளியேறும். வாய்வு சரியாகும். 

நாட்பட்ட தலைவலி குணமாக :

சோம்பு, அதிமதுரம் சித்ரமூலம் இவை மூன்றும் சமஅளவு எடுத்து இடித்து சூரணம் செய்து சூரணத்தின் எடைக்கு எடை நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் சூரணம் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர எந்தவிதமான தலைவலியும் நாட்பட்ட தீராத தலைவலியும் (Chronic Migraine ) குணமாகும்.

அதிமதுரம், சீரகம் இரண்டையும் இடித்து  குடிநீர் ஊற்றி ஊறவைத்து வடிகட்டி குடித்துவர தலைவலி சரியாகும்.

அதிமதுரம் பயன்கள் – இரத்த வாந்தி நிற்க :

சுத்தமான சந்தனத்தூள், அதிமதுரம் பொடி இரண்டையும் சமஅளவு கலந்து அதில் ஒரு கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டால் ரத்த வாந்தி நிற்கும். குடல்புண் ஆறும்.

அதிமதுரம் பயன்கள் – மஞ்சள்காமாலை குணமாக :

சங்கம் வேர்ப்பட்டை, அதிமதுரம் இரண்டையும் சமஅளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் அரைத்து 1 கிராம் அளவு காலை, மாலை பாலில் கலந்து குடித்தால் மஞ்சள்காமாலை சரியாகும்.


Spread the love

1 thought on “அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…!”

  1. Hey tһere! Someone in my Facebook group shared tһis website witth սs sо
    I came to lߋok itt oveг. I’m ԁefinitely loving
    tһe information. Ι’m bookmarking ɑnd will be
    tweeting this to myy followers! Excellent blog аnd brilliant design.

    Feel free t᧐ surf tⲟ my web paցе; top online casino

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *