Badam Pisin Benefits in Tamil

Spread the love

What is Badam Pisin?

Badam Pisin Benefits in Tamil பாதாம் பிசின் (Badam Gum) என்பது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய இயற்கையான பிசின் ஆகும்.

இந்த பாதாம் பிசினில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் உள்ளது. பிசினை தண்ணீரில் ஊறவைத்தால் ஜெல்லி போன்று இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சி அடைய செய்வதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான நன்மைகளை தருகின்றது. இது தென்மேற்கு ஆசியா, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் கிடைக்கின்றது.

Badam Pisin Benefits in Tamil
Badam Pisin Benefits in Tamil

Benefits of Badam Pisin:

பாதாம் பிசினில் 92.3% கார்போஹைட்ரேட், புரதம் 2.4% மற்றும் கொழுப்பு 0.8% இதனுடன் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு சத்து மற்றும் மெக்னிசிய சத்துக்களும் அதிகமாக உள்ளது. பாதாம் பிசின் இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Badam Pisin Benefits for Digestion and Gut Health:

பாதாம் பிசின் வயிற்றில் அமிலத்தன்மையை குறைத்து ஜீரணத்தை எளிதாக்குகிறது. பிசினில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பை தடுக்கிறது.

இது இயல்பான குடல் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கிரகிக்கின்ற தன்மையை ஏற்படுத்துகிறது.

Badam Pisin Benefits for Weight Loss:

பாதாம் பிசினில்  உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதற்க்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி உணர்வை குறைக்கிறது. இதனால் நொறுக்கு தின்பண்டங்கள் சாப்பிடுவதற்கான எண்ணங்கள் குறைகின்றது.

பாதாம் பிசினில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் குறைவான கலோரிகள் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வோடு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Badam Pisin Benefits for Cholesterol Control:

அதிகப்படியான கொழுப்பு சேர்தல் இதய நோய்க்கான முக்கிய காரணியாக அமைகிறது. ஆனால் பாதாம் பிசினில் உள்ள நார்ச்சத்தானது கரையக்கூடியதாக இருப்பதால் கொழுப்பையும் சேர்த்து சீரணிக்க செய்கிறது. இதனால் இரத்ததில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கிறது.

பாதாம் பிசின் இரத்த நாளங்களை தளர்வடைய செய்வதால் இரத்த ஓட்டங்கள் சீராக இருக்கின்றது. ஆகையால் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகின்றது. இரத்த அழுத்தம் குறைவதற்கான காரணியாக பாதாம் பிசின் இருப்பதால் இதய தொடர்பான குறைபாடுகள் தவிர்க்கப்படுகிறது.  

சப்ஜா விதை நன்மைகள்: உடல் எடை குறைய, மலச்சிக்கல் தீர

Badam Pisin Benefits for Bones And Joints:

பாதாம் கோந்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வளமான தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது எலும்புகளை வலுவான மற்றும் ஆரோக்கியமானதாக பராமரிக்க உதவுகிறது. இந்த பிசின் மூட்டு வலியை குறைத்து மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எலும்புகளின் தேய்மானத்தை குறைப்பதோடு எலும்புகளின் அடர்த்தியை பராமரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. 

Badam Pisin Benefits for Skin and Hair Health:

பாதாம் பிசினில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் free radicals ஐ எதிர்த்து போராடுகிறது. ஆகையால் முதுமை தோற்றத்தை தடுக்கிறது மற்றும் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது.

தலைமுடிக்கு தேவையான் ஊட்டச்சத்துக்கள் அதிகமான அளவில் பாதாம் பிசினில் இருப்பதால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை கொடுக்கின்றது  மற்றும் முடி உதிர்வையும் தடுக்கிறது.

How to make Almond Gum Jelly?

தேவையான பொருட்கள்:

ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறு துண்டு பாதாம் பிசின்.

செய்முறை:

ஒரு சிறு துண்டு பாதாம் பிசினை முதலில் தண்ணீரில் கழுவவேண்டும். பிறகு அரை  டம்பளர் சுத்தமான தண்ணீரில் பாதாம் பிசினை இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். ஊறிய பாதாம் பிசின் ஜெல்லி போல வரும். இதை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது பழச்சாறுகளிலும் கலந்து சாப்பிடலாம்.

முக்கிய குறிப்பு: பாதாம் பிசின் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகளை தருகின்றது. ஆகவே நாம் தினசரி அளவோடு பாதாம் பிசினை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் ஆகையால் ஒரு சிறந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று அளவோடு எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

BUY BADAM PISIN


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *