மிளகு மருத்துவ பயன்கள்-Black pepper benefits

Spread the love

மிளகு மருத்துவ பயன்கள் – Black pepper benefits in Tamil :

மசாலா பொருட்களின் ராஜாவாக திகழும் கருப்பு மிளகின் பயன்கள் ஏராளம். இது நம் உடல் சார்ந்த அனைத்து நன்மைகளுக்கும் பெரிதும் உதவுகிறது. உடல் எடை குறைப்பு செய்ய முயற்சிப்பவர்கள் முக்கியமாக பயன்படுத்தவேண்டிய பொருளாக கருப்பு மிளகு விளங்குகிறது.

உங்கள் குடலையும் வயிற்றையும் சுத்தப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கருப்பு மிளகின் சில முக்கியமான பயன்களை இங்கு பார்ப்போம்.

black pepper benefits

மிளகு பயன்கள் – Black pepper benefits :

  • உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • மலச்சிக்கலை தடுக்கிறது.
  • வயிற்றை சுத்தபடுத்துகிறது.
  • தோல் அலர்சிகளை தடுக்கிறது.
  • உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

செரிமான பிரச்சனையை நீக்க :

மிளகை உணவில் தினந்தோறும் பயன்படுத்துவதால் செரிமானத்தை தூண்டுகிறது. மிளகு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் குடலை சுத்தம் செய்கிறது. இரைப்பை நோய்களை தடுக்கிறது.

மலச்சிக்கலை போக்க :

நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலை வயிற்றை சுத்தம் செய்வது. அதாவது மலம் இயல்பாக கழிக்க வேண்டும். அப்படி மலம் இயல்பாக கழிக்கவில்லை என்றால் அதுவே மலச்சிக்கலாக மாறி உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

ஆகையால் தினமும் உணவில் சிறிது மிளகை சேர்த்து உண்பதனால் மலச்சிக்கல் தீரும் மற்றும் வயிற்றில்  தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

தோல் பிரச்சனைகளுக்கு மிளகின் பயன்கள் :

தோலில் ஏற்படுகின்ற வெண்னமயான வெள்ளை திட்டுகளை மிளகு சரி செய்கிறது. சருமத்தின் அசல் நிறத்தினை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. தினமும் மிளகை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

உடல் எடையை குறைக்க – Black pepper for weight loss :

உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் மிகமுக்கியமான மிளகை சேர்ப்பதன் மூலம்  உடல் எடை குறைய உதவுகிறது. கிரீன் டீயிலும் சிறிது மிளகு தூளை சேர்த்து அருந்தலாம். இதில் பைட்டோநியூடரியண்ட்ஸ் நிறைந்து உள்ளதால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.

மனச்சோர்வை போக்க – Black pepper benefits for depression :

இன்று உள்ள பிரச்சனைகளில் மிகமுக்கியமானது மனசோர்வுதான். இது சமயங்களில் உயிரையும் எடுத்துவிடும். ஆகையால் மிகுந்த மனசோர்வு உள்ளவர்கள் மிளகை அப்படியே வாயில் போட்டு மெல்லும்போது மன அமைதியை தூண்டுகிறது.

ஆனால் இவ்வாறு செய்பவர்கள் மிளகை அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுவாச பிரச்சனைக்கு மிளகின் பயன்கள் – Black pepper for respiratory problems :

சாதாரணமான சளி, இருமலுக்கு பாலில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து பருகினால் சரியாகிவிடும். இது எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது.

மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து திரிகடுகு தேநீர் அல்லது திரிகடுகு 3 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர சுவாச பிரச்சனை உடனடி நிவாரணம் கிடைப்பதை உணர்வீர்கள்.

சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாகவே காலங்களில் அனைத்து உணவுகளிலும் சிறிது மிளகு சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

இஞ்சி பயன்கள் – Ginger benefits in tamil

கருப்பு மிளகு பக்கவிளைவுகள் – Black pepper side-effects :

மிளகு அனைத்துவகையிலும் உடலுக்கு நன்மை உண்டாக்கும் என்றாலும் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கலாம்.

ஒரு சிலர் தொடர்ச்சியாக மருந்து சாப்பிடுபர்களாக இருந்தால் சில ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆகையால் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *