இஞ்சி பயன்கள் – Ginger benefits in tamil
Ginger benefits in tamil
இஞ்சி நம் பாரம்பரியமான சமையல் முறையில் பயன்படுத்தப்படும்.மிகமுக்கியமான மசாலா பொருளாகும்.
தமிழ் பெயர் : இஞ்சி
ஆங்கில பெயர் : Ginger
அறிவியல் பெயர் : Zingiber officinale
இஞ்சி பொதுவாக சுக்கு, சுக்கு பொடி, இஞ்சி எண்ணெய், இஞ்சி சாறு போன்ற பல வகைகளில் கிடைக்கிறது மற்றும் சுக்கு பல மருந்துகளில் மூலப்பொருளாகவும் இருக்கிறது.
இஞ்சியின் நன்மைகள் – Ginger benefits in tamil :
பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவத்தில் இஞ்சிக்கென்று ஒரு பெரிய இடம் உண்டு.
- செரிமானத்தை தூண்டுகிறது.
- குமட்டல் வாந்தியை குறைக்கிறது.
- காய்ச்சல் மற்றும் சளியை குறைகிறது.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- கீல்வாதம் குறைக்கிறது.
- அஜீரணத்தை சரியாக்கும்.
- கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
- மாதவிடாய் வலியை குறைக்கிறது.
- நோய்தொற்று வராமல் தடுக்கிறது.
திரிபலா நன்மைகள் – Thiripala benefits in tamil
இஞ்சியின் தனித்துவமான வாசனை அதன் எண்ணையில் இருந்து வருகிறது. இஞ்சியின் முக்கிய பயோஆக்டிவ் கலவை gingerol ஆகும். இதுதான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
gingerol சக்திவாய்ந்த எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்சிஜனேற்றியாகவும் (antioxidant) விளங்குகிறது என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
குமட்டல் வாந்தியை குறைக்கிறது :
குமட்டலுக்கு எதிராக இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சில வகையான அறுவை சிகிச்சையில் உட்பட்டவர்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியை நிறுத்த பெரிதும் உதவுகிறது.
சிலர் மருந்து சாப்பிடுவதனால் (chemotherapy) ஏற்படுகின்ற குமட்டலுக்கும் இஞ்சி பெரிதும் பயன்படுகிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற குமட்டல், வாந்தியை குறைக்க உதவுகிறது.
1278 கர்பிணிப் பெண்களை கொண்ட பன்னிரெண்டு ஆய்வுகளின்படி 1.1 – 1.5 கிராம் இஞ்சி குமட்டலினை குறைக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.
இஞ்சி பயனுள்ளது என்றாலும் கர்பிணிப் பெண்கள் அளவோடு எடுக்க வேண்டும். அதே சமயத்தில் மருத்துவரின் ஆலோசனைபடி உட்கொள்ள வேண்டும்.
கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் இஞ்சியை கண்டிப்பாக தவிக்க வேண்டும்.
எடையை குறைக்க உதவுகிறது – ginger for weight loss :
மனிதர்கள் மற்றும் விலங்குகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் உடல் எடையை குறைக்க இஞ்சியின் பங்கும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.
இரத்த இன்சுலின் அளவைக் குறைக்க இஞ்சி உதவுகிறது என்றும் உயர் இரத்த இன்சுலின் அளவு உடல் பருமனுடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் சொல்லப்படுகிறது.
இஞ்சி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து விரைவாக உடல் எடையை குறைக்கிறது.
எலிகளை கொண்டு ஆராய்ந்ததில் எலிகளின் கெட்ட கொழுப்பு விரைவாக குறைத்து எடை குறைந்தது என்று ஆராயப்பட்டுள்ளது.
மாதவிடாய் காலங்களின் வலியை குறைக்க – To reduce the pain of menstruation :
மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற வலியை இஞ்சி கொண்டு குறைக்கலாம் என்று ஆராயப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க – Urai Marunthu
புற்றுநோயை குறைக்கிறது – ginger for cancer :
அனைத்து வகையான புற்று நோய்களுக்கான மாற்று மருந்தாக இஞ்சி உள்ளது என்று ஆராயப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு எதிரான சக்திவாய்ந்த பண்புகள் இஞ்சியில் ( gingerol ) அதிகம் உள்ளது என்று கருதப்படுகிறது.
கணைய புற்று நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்களுக்கு இஞ்சி மிக சிறந்த எதிர்ப்பு சக்தியாக உள்ளது என்று ஆராயப்பட்டுள்ளது.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க – Improve brain function :
வயது முதிர்வு காரணங்களால் சிலருக்கு ஆக்சிஜனேற்ற மனஅழுத்தம் மற்றும் நாள் பட்ட மனஅழுத்தம் இவற்றை குறைக்கிறது.
விலங்குகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இஞ்சியின் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் பயோஆக்டிவ் தன்மை மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கும் என்று கூறுகின்றன.
நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க – prevent infection :
இஞ்சி (gingerol) நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் இருந்து காக்கிறது.
இஞ்சிச்சாறு பலவகையான பாக்டிரியாவினை அழிக்க உதவுகிறது.
பல் ஈறு வீக்கம், வாய் வழி பாக்டீரியாக்களை அழிக்க மிகவும் உதவுகிறது.
சுவாச நோய்தொற்றுக்கு காரணமான வைரஸ்க்கும் எதிராக இஞ்சி சிறப்பாக செயல்படுகிறது.
Pingback: மிளகு மருத்துவ பயன்கள் - Black pepper benefits in tamil - RITHANYA STORES
Pingback: газовый котел напольный
thanks