
ஜாதிக்காய் பொடி பயன்கள்
நம் நாட்டில் குழந்தைகளுக்கு சளி-இருமல்-சுரம் – வயிறு உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் இருந்தால் தாய்மார்கள் ஜாதிக்காயினை வெந்நீர் அல்லது தாய்ப்பாலில் இழைத்து நாக்கின் மீது தடவுவார்கள். வயிற்றுக் கோளாறு இருந்தால் வயிற்றின் மீது பற்று போடுவார்கள்.
அதுமட்டுமல்ல நம் உணவு பொருட்களில் சமையலின் போது பயன்படுத்தும் மசாலா பொருட்களில் சாதிக்காயும் ஒன்று. ஜாதிக்காய் நம் உணவு வகைகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் மசாலா பொருள்களிலும், சிலவகை இனிப்பு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது.
இதனால் உண்ட உணவு எவ்வளவு கடினத் தன்மை கொண்டதாக இருந்தாலும் எளிதில் செரிமானம் ஆகி விடுகிறது.
இத்தகைய பயனுள்ள ஜாதிக்காய் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஜாதிக்காய் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
ஜாதிக்காய் என்றால் என்ன?
சாதிக்காய் என்றும் ஜாதிக்காய் என்றும் சொல்வார்கள். இது மலைப்பாங்கான குளிர்ச்சியான இடங்களில் வளரும் ஒரு வகை மரத்தின் காய். இந்த காய் பழுத்தபின் சதைப்பற்றாக இருக்கும். தமிழகத்தில் ஏற்காடு, குற்றாலம், கொல்லிமலை, போன்ற குளிர்ச்சியான மலை பிரதேசங்களில் அதிகமாக விளைகின்றது.
இந்த காயின் மேல் தோலை அப்படியே துண்டுதுண்டாக அரிந்து மாங்காய், எலுமிச்சம்பழம் போன்று ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருப்பதோடு ஜாதிக்காயின் நன்மைகளை அடையாளம்.
ஜாதிக்காய் நன்மைகள்: Nutmeg benefits in tamil
- வலியை குறைக்கிறது.
- நல்ல தூக்கத்தை அளிக்கிறது.
- செரிமானத்தை அளிக்கிறது.
- மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
- வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
- அழகான தோல் பராமரிப்புக்கு உதவுகிறது.
- இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
ஜாதிக்காயினால் மயக்கம், பித்தம், வாந்தி, பேதி, பலகீனம், இருமல், இரைப்பு நீங்கும். உடலுக்கு வெப்பத்தை தரும். சீரான சக்தியை அதிகப்படுத்தி சுறுசுறுப்பை தரும்.
ஜாதிக்காய் பொடி பயன்கள்: Jathikkai powder benefits
சாதிக்காயை இடித்து நன்றாக பொடி செய்து கொண்டு அரை ஸ்பூன் பொடியை 100 ml தயிரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்தவிதமான பேதியானாலும் உடனே கட்டுப்படும். தொடர்ந்து 2 அல்லது 3 வேளை சாப்பிட அறவே பேதி நின்றுவிடும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் பேதிக்கு ஜாதிக்காய் பொடி கலந்த தயிரை மெல்லிய துணியில் முடிச்சு கட்டி வடியும் நீரை சேகரித்து வேளைக்கு 30ml அளவு தொடர்ந்து 2 அல்லது 3 வேளை கொடுத்தால் சரியாகும். இவ்வாறு செய்வதால் பேதி கட்டுப்படுவது மட்டும் இல்லாமல் நீர்வேட்கை, நாவறட்சி, உடல் வறட்சி, நீர் சத்து குறைவினால் ஏற்படும் டிஹைட்ரேஷன் ஆகியவையும் சரியாகும்.
கோடைகாலத்தில் உடலில் உஷ்ணம் அதிகரித்த நிலையில் உண்டாகும் பேதியை உஷ்ணபேதி (summer diarrhoea) என்பர். மேற்கூறிய முறையை இந்த உஷ்ண பேதிக்கு பயன்படுத்தி பலன் அடையாளம்.
மசக்கை வாந்தி நிற்க: ஜாதிக்காய் பொடி பயன்கள்
கருவுற்ற காலத்தில் தாய்மார்களுக்கு உண்டாகும் மசக்கை வாந்திக்கு சாதிக்காய் சூரணத்தை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் காலை, மாலை இரண்டு வேளை உணவுக்கு பின் தேனில் குழைத்து சாப்பிட்டால் மசக்கை வாந்தி நிற்கும்.
ஆழ்ந்த தூக்கத்திற்கு: ஜாதிக்காய் பொடி பயன்கள்
ஜாதிக்காய் பொடியை தினசரி இரவு படுக்குமுன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் பசும்பாலுடன் சாப்பிட்டுவர நல்ல தூக்கம் வருவதுடன் மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழக் காணலாம். அத்துடன் மலசிக்கல் நீங்கி மலம் வெளியேறும்.
கண் பார்வை திறன் அதிகரிக்க: ஜாதிக்காய் பொடி பயன்கள்
சாதிக்காயை நல்ல தண்ணீரில் சந்தனம் இழைப்பது போன்று உரைத்து தினசரி இரவு படுக்குமுன் கண் இமைகளின் மீது லேசாக பூசி படுக்க கண் நோய்கள் குணமாகும். கண் பார்வை திறன் அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும்.
வாய் நாற்றம் போக்க: ஜாதிக்காய் பயன்கள்
ஜாதிக்காயை வெற்றிலை பாக்குடன் சேர்த்து உபயோகிக்க ஜாதிக்காயின் பலன்களை அடையாளம். உண்ட உணவு எளிதில் சீரணமாகும். வாய் நாற்றம் நீங்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க: ஜாதிக்காய் பயன்கள்
ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்து 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி, உறக்கமின்மை, விக்கல், குமட்டல்,ஒழுங்கற்ற இதய துடிப்பு, படபடப்பு குணமாகும்.
சாதிக்காய் வாயுவை போக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும்.
உயிரணுக்கள் அதிகரிக்க: ஜாதிக்காய் பொடி பயன்கள்
சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் சூரணங்களிலும், லேகியங்களிலும் ஜாதிக்காய் சேர்க்கப்படுகிறது. ஜாதிக்காய் ஆண்மையை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு தளர்ச்சி, ஆண்மைக் கோளாறுகள், மலட்டுத்தன்மை போன்றவற்றை ஜாதிக்காய் போக்குகிறது.
திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தால் அதற்கு ஆண் காரணம் என்றாலும் அவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருந்தால் ஜாதிக்காயை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு காலை, மாலை உணவிற்கு பின் தேனில் குழைத்து சாப்பிட்டு வர விந்துவில் உயிரணுக்கள் உற்பத்தியாகி, விந்தணு, உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெரும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
வாயு தொல்லை, மலச்சிக்கல் சரியாக: ஜாதிக்காய் பொடி நன்மைகள்
வாயு தொல்லை, மலச்சிக்கல் சரியாக: ஜாதிக்காய் பொடி நன்மைகள்
நம்மில் பலருக்கு வாயுத் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சீரணம் ஆகாது. பசி இருக்காது. மலச்சிக்கலும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு கை கொடுக்கும் தோழனாக ஜாதிக்காய் விளங்குகிறது.
சீரகம், சுக்கு, ஜாதிக்காய் மூன்றையும் சம எடை எடுத்து இடித்து சலித்து சூரணமாக்கி அதற்கு சம அளவு சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு வேளையும் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் வெந்நீருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர மேற்சொன்ன தொல்லைகள் நீங்கி நலமடையலாம்.
தலைமுடி செழித்து வளர: ஜாதிக்காய் பொடி பயன்கள்
ஜாதிக்காயையும், கடுக்காயையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தலைக்கு பூசி குளித்துவர உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். தலைமுடி உதிர்தல் நிற்கும். அதுமட்டும் இல்லாமல் தலைமுடியும் நன்கு செழித்து வளரும்.
இதையும் படிங்க:
கடுக்காய் பொடி நீரிழிவு நோயை தடுக்க – kadukkai podi Prevent diabetes
ஜாதிக்காய் பக்க விளைவுகள்
ஜாதிக்காயை ஏராளமான மருத்துவ நன்மைகள் இருந்தாலும் அளவோடு பயன்படுத்த வேண்டும். முக்கியமாக சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொண்டால் முழு பலனையும் அடையாளம்.
முக்கிய குறிப்பு : இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.