கடுக்காய் பயன்கள் – kadukkai podi benefits in tamil

Spread the love

kadukkai podi benefits in tamil – கடுக்காய் பொடி பயன்கள்

kadukkai benifits in tamil

kadukkai podi benefits in tamil

காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் சாப்பிட்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும் கோலை வீசி குலாவி நடப்பான் என்பது சித்தர்கள் வாக்கு.

அம்மாவிற்கு இணையாக யாரும் இருக்க மாட்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கடுக்காய் பத்து தாயிற்கு நிகரானது என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவு  சிறந்த கடுக்காயின் பயன்கள் பற்றியும் சாப்பிடும் முறை பற்றியும் பார்ப்போம்.

கடுக்காய் மரம் பெரும்பாலும் இந்தியா, நேபாளம், சீனா, இலங்கை, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற வெப்பமண்டல பகுதிகளில் வளர்கின்றது. கடுக்காய் மரம் 30மீ உயரம் வரை வளரக்கூடியது.

கடுக்காய் பொடி பயன்கள்  – Kadukkai Powder Benefits :

நம் பாரம்பரிய சித்தமருந்துகளின் ராஜா என்று சொல்லப்படும் கடுக்காய் பல வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடுக்காய் சிறந்த மலமிளக்கியாகயும் இரத்த சுத்திகரிப்பானாகவும் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கொண்டவையாக திகழ்கிறது.

நாட்டு மருந்துகளில் மிகச்சிறந்த மருந்து கடுக்காய். கடுக்காயில் அகம் நஞ்சு. கடுக்காயை உடைத்தல் உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு தோலை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

  1. நீரிழிவு நோயை தடுக்கிறது.
  2. மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது.
  3. இல்லற ஆரோக்கியம் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
  4. எடையை குறைகிறது.
  5. ஜீரணத்தை அதிகரிக்கும்.
  6. முடி உதிர்வை தடுக்கிறது.
  7. வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பைப்புண் அனைத்தையும் சரியாக்கும்.
  8. மலச்சிக்கலை போக்கும்.
  9. பசியை தூண்டும்.
  10. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  11. வாதம்,பித்தம்,கபம் மூன்றையும் சமநிலைப்படுத்தும்.
  12. மூலத்தை சரியாக்கும்.
  13. இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
kadukkai benifits

கடுக்காய் பொடி நீரிழிவு நோயை தடுக்க – kadukkai podi Prevent diabetes :

கடுக்காய் சிறந்த இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்த கடுக்காயை உட்கொள்வதால் பீட்டா கணைய உயிரணுக்களிலுருந்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இது மாவுச்சத்தின் அளவை குறைக்க உதவுகிறது.

எனவே கடுக்காய் பொடியை வழக்கமாக உட்கொள்ளுவதால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிதாகம், எடை இழப்பு போன்ற பல்வேறு நீரிழிவு அறிகுறிகளில் இருந்து விடுவிக்கிறது.

கடுக்காய் பொடி மூளையின் செயல்திறனை அதிகரிக்க – To increase the efficiency of the brain :

கடுக்காய் மூளை செயல்திறனை அதிகரிக்கும் பண்புகளை அதிகமாக கொண்டுள்ளது. கடுக்காயில் உள்ள ஆக்சிஜனேற்ற தன்மை மனிதனின் நினைவுத்திறன், கவனம், அமைதி, விழிப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்கின்றது. மூளையின் பதற்றத்தை குறைக்கிறது. பகுத்தறிவு சிந்தனையை வளர்கின்றது.

இல்லற ஆரோக்கியம் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்க :

கடுக்காயின் எண்ணற்ற நன்மைகளில் ஒரு முக்கிய பண்பு என்னவென்றால் ஆண்கள் மற்றும் பெண்களின் இல்லற இன்ப ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

கடுக்காயில் இயற்கையான பாலுணர்வு இருப்பதால் மனஅழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கின்றது. கடுக்காய் குழந்தையின்மையை குறைக்கின்றது. பல இனப்பெருக்க பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கின்றது.

ஆண்களின் வீரியம் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது.

கடுக்காய் பொடி செரிமானத்தை அதிகரிக்க – kadukkai powder To increase digestion :

kadukkai benifits

கடுக்காய் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உணவுக்குழாய் புண், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, வாய்வு, இரைப்பை உணவுக்குழாய் நோய், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய பாரம்பரிய மருந்தாகும்.

கடுக்காயில் உள்ள கர்மிநேட்டிவ் தன்மை வயிறு மற்றும் குடலில் உள்ள உணவுத்துகள்களை உடைத்து செரிமான சுரப்பை அதிகரிக்கிறது.

இதன் மூலம் குடல் வழியாக அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வயிற்று வீக்கம் மற்றும் வாயுவை அகற்றுகிறது.

எடையை குறைக்க – To lose weight :

அதிகப்படியான கொழுப்பை குறைப்பதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது AMA நச்சுக்களை அகற்றுவதன் மூலம் திடீர் பசி மற்றும் ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுக்கான எண்ணங்களை குறைகிறது.

இது உடலில் L.T.L கொழுப்பை குறைக்கிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.

ஒரு டம்ளர் வெண்ணீரில் ஒரு ஸ்பூன் கடுக்காய் தூளை சேர்த்து அருந்துவதால் அதிகப்படியான கொழுப்பை அகற்றி நன்கு மெலிதான உடலை பெறுவீர்கள்.

காயங்களையும் நோய்தொற்றுகளையும் குணப்படுத்த – To heal wounds and infections :

கடுக்காய் அதிகப்படியான பாக்டிரியா மற்றும் வைரஸ்களை அழிக்கிறது. இது உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் மட்டும் இல்லாமல் உடலில் உள்ள காயங்களையும் விரைவாக ஆற்றுகிறது.

இதில் உள்ள பயோஆக்டிவ் கலவை பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பண்டையகாலமுதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முடி உதிர்வை தடுக்க – Prevent hair loss :

முடி ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் கடுக்காயின் பங்கு மிகவும் முக்கியமானதாகிறது.

அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

திரிபலாவின் ஒரு சக்திவாய்ந்த அங்கமாக இருக்கிறது. இது மயிர்கால்களை சுத்தம் செய்கிறது. அழுக்கு மற்றும் அசுத்தங்களை அகற்றி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

கடுக்காய் முடிவேர்களை பலப்படுத்தி முடி உடைந்து உதிர்வதை தடுக்கிறது மற்றும் முடியை மென்மையாக்குகிறது.

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் மருதாணி பொடியுடன் தண்ணீர் ஊற்றி கலந்து தலை முடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல ஆரோக்கியமான முடிவளர்வதை காணலாம்.

சுவாச பிரச்சனைகளை சரியாக்க :

கடுக்காய் அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. ஆஸ்துமா, ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல், மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

இது உடலில் கபம் சேருவதை தடுப்பதால் சுவாச பிரச்சனையை எளிதாக்குகிறது மற்றும் சளியிலிருந்து விடுபட செய்கிறது.

கடுக்காய் பொடியை தினமும் உட்கொள்வதன் மூலம் நுரையீரல் திசுக்களை வலுப்படுத்தி நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த – To strengthen heart health :

கடுக்காயின் ஆரோக்கியமான பண்புகள் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகசிறந்த பங்காற்றுகிறது. மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் இதய படபடப்பை குறைத்து நன்மை பயக்கிறது.

இதய தசைகள் வலுவடைய இரத்தத்தின் கொழுப்பின் அளவை குறைப்பதின் மூலம் மாரடைப்பு, இரத்த கட்டிகள் போன்ற ஆபத்துகளை குறைக்கிறது.

கடுக்காயின் பக்கவிளைவுகள் – Side effects of kadukkai :

சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி கடுக்காயை உட்கொள்ளல் மிகவும் அவசியமாகிறது மற்றும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.


Spread the love

3 thoughts on “கடுக்காய் பயன்கள் – kadukkai podi benefits in tamil”

  1. Pingback: Adathoda Benefits in Tamil - ஆடாதொடை மருத்துவ பயன்கள்: - RITHANYA STORES

  2. Pingback: ஜாதிக்காய் பொடி பயன்கள்: தூக்கமின்மை, உயிரணுக்கள் குறைபாடு நீங்க

  3. Pingback: சப்ஜா விதை நன்மைகள்: உடல் எடை குறைய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *