கருணை லேகியம்
சேரும் சரக்குகள் மற்றும் அளவுகள் :
காட்டுக் கருணை,
காரக்கருணை,
புளி நரளை,
பிரண்டை,
மருள் மூலம்,
குமரி வேர்,
பிடிகருணை,
மாம்பருப்பு,
சுக்கு,
கடுக்காய் தோல்,
கொடிவேலி வேர்,
கோரைக்கிழங்கு,
சரக்கொன்றைப் புளி – வகைக்குச் சம எடையளவு,
பனைவெல்லம், பசுநெய், தேன் – தேவையான அளவு.
அளவும் துணை மருந்தும் :
5 கிராம் முதல் 10 கிராம் அளவு எடுத்து நாகபற்பம் அல்லது நத்தைப் பற்பம் 100 முதல் 200 மி.கி சேர்த்து தினம் இரண்டு வேலைகள்.
தீரும் நோய்கள் :
அனைத்து விதமான மூல நோய்களும் சரியாகும்.