List of omega-3 foods – ஒமேகா-3 நிறைந்த சத்தான 7 உணவுகள்

Spread the love

List of omega-3 foods

list of omega 3 foods

List of omega-3 foods

நாம்‌ ‌தினசரி‌ ‌எடுத்துக்‌ ‌கொள்ளும்‌ ‌உணவுகளில்‌ ‌கடல்‌ ‌உணவுகள்,‌ ‌பயறு‌ ‌வகைகள்‌ ‌மற்றும்‌ ‌விதைகளில்‌ ‌ஒமேகா‌-3‌ ‌இருப்பது‌ ‌நம்‌ ‌உடலுக்கு‌ ‌ஆரோக்கியத்தை‌ ‌அளிக்கும்.‌ 

பொதுவாக நாம் அனைவரும் கொழுப்பு உடலின் ஆரோக்கியத்திற்கு மிக மோசமானது என்று கருதிக் கொண்டிருக்கிறேன். omega – 3 ல் உள்ள நல்ல கொழுப்புகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

மூளை மற்றும் இதயம் சார்ந்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. 

how do we get the benefits of omega-3?

List of omega-3 foods

omega – 3 நிறைந்த ஆரோக்கியமான 7 உணவுகளை பற்றி பார்ப்போம் 

1. Seafood and fish

கடல் உணவுகள் மற்றும் மீன் வகைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள். கடல் மீன்களில் மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. கடல் மீன்களில் vitamin D, புரதம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

2. Soybeans

சோயா பீன்ஸ் புரதச்சத்து நிறைந்த உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோயா பீன்ஸ்-ஐ முளை கட்டி சாப்பிடலாம். அல்லது மசாலாவாக செய்து சாப்பிடலாம். 

தலைமுடி உதிர்தலை தடுக்கும் வழிமுறைகள் - How to control hair fall 

3. Walnuts

omega – 3 நிறைந்துள்ளதால் walnut நம்மிடையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்ரூட்டில் linoleic மற்றும் linolenic acid அதிகம் உள்ளதால் தோல் அலர்ஜிகளுக்கு எதிராக செயல்படுகிறது. walnut ல் அதிகமான vitamin A, B, C மற்றும் vitamin E அதிகமாக உள்ளது.

List of omega-3 foods

4. Chia seeds

சியா விதையில் அதிகமான omega – 3, கால்சியம், மெக்னிசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் antioxidants மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

5. Flaxseeds

ஆளி விதைகளில் ஒமேகா 3 அதிகம் நிறைந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க மிகவும் உதவியாக உள்ளது. ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.

Hair fall reason in Tamil-தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள்

6. Kidney beans

kidney beans-ல் ஒமேகா- 3 இருப்பதுடன் அதிகமான புரத சத்துக்கள், vitamin B1 நிறைந்துள்ளது. இதில் அதிகப்படியான insoluble fibre உள்ளதால் செரிமானத்திற்கு உதவியாக உள்ளது.

7. Canola oil

கடுகு எண்ணையில் அதிகமான ஒமேகா-3 உள்ளது. கடுகு எண்ணையை சமையலுக்கு பயன்படுத்தும் போது நமக்கு அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இதில் monounsaturated கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் உடல் பருமன் குறைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக உள்ளது.

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Chia seeds buy online here

Flaxseed buy online here

walnut buy online here


Spread the love

1 thought on “List of omega-3 foods – ஒமேகா-3 நிறைந்த சத்தான 7 உணவுகள்”

  1. Pingback: weight gain diet plan: follow these home remedies to increase weight

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *