உரை மருந்து – Urai Marunthu :

Spread the love

உரை மருந்து – Urai Marunthu :

உரை மருந்து - Urai Marunthu

Urai Marunthu

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க – Urai Marunthu:

இன்றைய நவீன உலகத்தில் நம் வாழ்க்கை முறை பலவகைகளில் மாறிவிட்டன. இந்த வாழ்க்கை மாற்றங்களில் நம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதை மறந்து விட்டோம். 

நம் வீட்டில் பாட்டி, தாத்தா சொல்லித்தந்த அனைத்து ஆரோக்கியமான விஷயங்களையும் மறந்துவிட்டோம். அதன் விளைவுகளை நம் குழந்தைகளின் ஆரோக்கியமற்ற சூழலில் காணமுடிகிறது.

இன்றைய அதிவேகமான வாழ்க்கை ஓட்டத்தில் ஓடிஓடி உழைத்து சம்பாதிக்கின்றோம். எதற்காக என்று கேட்டால் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதே குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறையாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால் நிச்சயமாக ஒன்றும் இல்லை.

ஆனால் எல்லோரும் சொல்வது என்னவென்றால் என் குழந்தைக்கு ஒன்னுனா என்னால தாங்கவே முடியாது என்பார்கள். அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வரும். உடனே மருத்துவமனைக்கு  சென்று விடுவார்கள். ஆனால் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வை பற்றி சிந்திக்கவே மாட்டார்கள்.

ஆனால் நம் முன்னோர்கள் நம் வீட்டு குழந்தைகளுக்காக பல வீட்டு வைத்தியம், கைவைத்தியம் என்று சொல்லித்தந்தார்கள். அதையெல்லாம் நாம் உதாசீனம் செய்ததின் விளைவை நம் குழந்தைகள் எதிர் காலங்களில் அனுபவிக்கப்போகிறார்கள்.

அப்படி சொன்ன ஒரு வீட்டு முறை வைத்தியம்தான் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றல் மருந்தான உரை மருந்து.

இன்று நம்மில் பலருக்கும் உரை மருந்து (Urai Marunthu) என்றால் என்னவென்றே தெரியாது. நாகரீகம் என்ற பெயரில் அனைத்தையும் மறந்து விட்டோம். அப்படி மறந்த உரை மருந்தை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.

உரை மருந்து (Urai Marunthu for Babies) என்றால் என்ன?

  1. வசம்பு 
  2. சுக்கு 
  3. மாசிக்காய் 
  4. கடுக்காய் 
  5. சித்தரத்தை
  6. ஜாதிக்காய்

இந்த ஆறு பொருட்களையும் உரை கல்லில் முறையாக உரைத்து கொடுப்பதே உரை மருந்து.

உரை மருந்தை (Urai Marunthu)எப்பொழுதிலிருந்து கொடுக்கவேண்டும் ?

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இருந்து முறையாக இந்த உரை மருந்தை கொடுக்கலாம்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குழந்தைக்கு தலை குளிப்பாட்ட வேண்டும். அப்படி தலை குளிப்படுகின்ற நாட்களில் மட்டும் இந்த உரை மருந்தை முறையாக உரைத்து கொடுக்கலாம்.

முக்கியமாக உரைமருந்திற்காக பயன்படுத்தும் உரை கல்லை மிகசுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

குழந்தை பிறந்து ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரை கொடுக்கலாம்.

உரைமருந்தை (urai marundhu in tamil) எப்படி கொடுக்க வேண்டும்?

குழந்தை பிறந்த 30 நாட்கள் முதல் கொடுக்கலாம்.

ஒரு சுத்தமான அகல் விளக்கை நல்லெண்ணெயில் ஏற்றி மேலே சொன்ன 6 மருந்து பொருட்களையும் ஒவ்வொன்றாக விளக்கில் காட்ட வேண்டும். அப்படி விளக்கில் காட்டும்போது அந்த 6 பொருட்களின் முனைப்பகுதி கருகி வரும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து சுத்தமான உரை கல்லில் ஒருமுறை மேல்நோக்கியும் ஒரு முறைகிழ்நோக்கியும் உரைக்க வேண்டும். அப்படி உரைத்த மருந்தை எடுத்து சிறிது தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையின் நாக்கினுள் தடவிவிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை கொடுக்கலாம்.

இந்த உரை மருந்தை குழந்தையின் மாதத்திற்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு,  ஒரு மாத குழந்தை என்றால் உரை மருந்தை கல்லில் மேல்நோக்கி ஒரு முறையும் கீழ்நோக்கி ஒருமுறையும் உரைக்க வேண்டும்.

இரண்டு மாத குழந்தை என்றால் உரை மருந்தை கல்லில் மேல்நோக்கி இரண்டு முறையும் கீழ்நோக்கி இரண்டு முறையும் உரைக்க வேண்டும்.

மூன்று மாத குழந்தை என்றால் உரை மருந்தை கல்லில் மேல்நோக்கி மூன்று முறையும் கீழ்நோக்கி மூன்று முறையும் உரைக்க வேண்டும்.

இவ்வாறு குழந்தையின் ஒவ்வொரு மாதத்திற்கும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். இம்முறையை குழந்தையின் 5 வயதுவரை கொடுக்கலாம். தாய்ப்பாலில் மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை. சுத்தமான தண்ணீரிலும் கொடுக்கலாம்.

குழந்தையின் ஒரு வயதிற்கு மேல் உரைமருந்தை 12- 15 முறை உரைத்து கொடுக்கலாம். 

குறிப்பாக தினமும் கொடுக்க கூடாது.

எதற்க்காக குழந்தைக்கு உரை மருந்து கொடுக்க வேண்டும்?

நம் குழந்தைக்கு நல்ல உறக்கம், முறையான மலம் கழித்தல், சீரான செரிமானம் ஏற்பட மற்றும் அடிக்கடி மாந்தம், சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலுக்கு தேவையான எதிர்ப்பாற்றலை கொடுக்கும்.

வசம்பு

உரை மருந்து

பிள்ளை வளர்ப்பான் என்று சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வயறு மந்தம், வயறு உப்பசம், செரிமான பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது.

பிள்ளை வளர்ப்பான் என்று சொல்லக்கூடிய வசம்பை அளவோடு மட்டுமே பயன்படுத்தினால்தான் அதன் முழு பயன்களும் கிடைக்கும்.

வசம்பை பிள்ளை வளர்ப்பான் என்பதால் தினமும் அடிக்கடி பயன்படுத்த கூடாது.

கடுக்காய்

பசியை தூண்டும் 

ரத்தத்தை சுத்தம் செய்யும்.

வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலைபடுத்தும்.

உடம்பை வலுவாக்கும்.

அசீரணக்கோளாறை சரியாக்கும்.

கடுக்காய் பயன்கள் – kadukkai podi benefits in tamil

மாசிக்காய்

உரை மருந்து - Urai Marunthu online

 வயிற்று புண்ணை ஆற்றும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.

ஜாதிக்காய்

உரை மருந்து - Urai Marunthu in tamil

ஜீரண சக்தியை சீராக்கும்.

ஆழ்ந்த உறக்கத்தை உண்டாக்கும்.

வாயு பிரச்சனையை சரியாக்கும்.

சுக்கு மற்றும் சித்தரத்தை

சளி இருமலை போக்கும்.

நெஞ்சில் உள்ள சளியை வெளியேற்றும்.


Spread the love

2 thoughts on “உரை மருந்து – Urai Marunthu :”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *