7 Iron-rich foods that will boost your immune system
Iron-rich foods
உலகெங்கிலும் COVID-19 வந்ததிலிருந்து மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது இயற்கையான ஆரோக்கிய உணவு முறைகளும், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் காரணமாக அமைகிறது.
உங்களின் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் உடலில் இரும்பு (hemoglobin) சத்தை அதிகரிக்கும். உடலில் இரும்புச் சத்துதான் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.
இதனால் உடலில் நோயெதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவேதான் உங்கள் உடலுக்கு இரும்பு சத்து மிகவும் இன்றியமையாததாகும்.
7 Iron-rich foods can boost your immune system

1. Spinach
கீரை வகைகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்வது மிக அவசியமாகிறது. ஏனென்றால் கீரை வகைகளில் அதிகப்படியான ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் இரும்பு சத்து ஏராளமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முருங்கை கீரை, பசலை கீரை, கரிசாலை போன்ற கீரை வகைகளில் அதிகப்படியான இரும்பு சத்து அடங்கியுள்ளது. கீரைகளில் அதிகப்படியான antioxidant and beta carotene நிறைந்துள்ளது.
2. Dry Fruits

உங்கள் உடம்பில் இரும்புச் சத்தை அதிகரிக்க உலர் பழவகைகள் திராட்சை, பாதாம், பிஸ்தா, அக்ரூட் , அத்திப்பழம், பேரிச்சை இவைகளை சேர்த்து கொள்வது அவசியமான ஒன்று. இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகிறது.
3. Legumes

பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் வகைகள் அனைத்தும் இரும்பு சத்து நிறைந்தவையாக இருக்கின்றன. இவை பொதுவாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கிறது.
4. Potatoes
வேகவைத்த உருளைக்கிழங்கில் உங்களின் உடம்புக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்பு சத்தில் 10% கிடைக்கின்றது.
5. Soya
100 gram சோயாபீன்ஸ்ல் 15.7 mg இரும்பு சத்து நிறைந்துள்ளது. சோயாவில் புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் பி 1 போன்றவைகளும் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6. Chicken
நாட்டு கோழி கல்லீரலில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. மற்ற இறைச்சிகள் விரும்பினால் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவைகளையும் சாப்பிடலாம்.
7. Fish
பொதுவாக கடல் உணவுகளில் குறைவான கலோரிகள் மற்றும் இரும்பு சத்து, புரதச் சத்தும் நிறைந்து உள்ளன. சில முக்கிய மீன் வகைகளான நெத்திலி, மத்தி மீன், கானாங்கெளுத்தி மீன் வகைகள் இரும்பு சத்து மிகவும் நிறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.கடல் உணவுகளான மீன்களில் ஒமேகா 3 நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் இவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Pingback: Pumpkin Seed Benefits for health - RITHANYA STORES