How to control hair fall mens

Spread the love

How to control hair fall mens – தலைமுடி உதிர்தலை தடுக்கும் வழிமுறைகள்:

How to control hair fall mens

How to control hair fall mens and womens

 எந்த ஒரு நோய்க்கும் தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகளை எடுத்து கொள்வது என்பது தவிர்க்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும். 

how to control hair fall naturally

தலைமுடியை நம் அனைவரும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொருவரும் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தலைக்கு சுத்தமான கலப்படமற்ற தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்து தலையில் பத்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்த பின்னர் அரை மணி நேரம் கழித்து மிதமான வெந்நீரில் மூலிகை சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். 

பெண்களாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் ஆண்களாக இருந்தால் புதன் மற்றும் சனி கிழமைகளில் குளிக்க வேண்டும். 

how to control dandruff and hair fall-பொடுகை நீக்கும் வழிமுறை:

கலப்படம் இல்லாத சுத்தமான நல்லெண்ணெய்யை காய்ச்சி அதில் சிறிது வேப்பம் பூ ,வெந்தயம், தும்பை பூ மற்றும் சில பச்சரிசிகள் இவைகளை போட்டு இறக்கி வெதுவெதுப்பாக இருக்கும் போது தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை போய் விடும்.

தலைக்கு தினமும் ரசாயனம் கலக்காத இயற்கை முறையில் தயாரிக்கப்படும் தைலங்கள் அல்லது சுத்தமான  தேங்காய் எண்ணெய் தடவுவது மிகவும் நல்லது.

தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போதும்,குளித்த பின் தலையை துவட்டும் போதும்  முரட்டுத்தனமாக இல்லாமல் மென்மையாக துவட்ட  வேண்டும்

hair fall control foods-தலைமுடி உதிர்தலை தடுக்கும் உணவு முறைகள்:

நாம் தினந்தோறும் உணவில் உப்பு, புளி, காரம் குறைத்தல் மற்றும் மசாலா கலந்த உணவு பண்டங்களை தவிர்த்தல் வேண்டும்.

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், மோர், நெய், வெண்ணெய் இவைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தினமும் காலை-மாலை இளநீர் சாப்பிடுவது அதிகப்படியான பலன்களை தரும்.

Hair fall reason in Tamil-தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள்:

உடலில் அதிக வெப்பத்தின் காரணமாக ஏற்படும் தலைமுடி உதிர்வதை தடுக்க கேரட், பீட்ரூட், வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு, கொத்தமல்லி கீரை, கறிவேப்பிலை இவைகளை தயிரில் கலந்து சாலட் தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

கறிவேப்பிலையை நீக்காமல் அதனையும் உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையை பொடியாகவோ அல்லது துவையலாகவோ செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை அவ்வப்போது தவறாமல் உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

வெல்லம் சேர்த்த வேர்க்கடலை உருண்டை, உலர்ந்த திராட்சை, கறிவேப்பிலை, பேரிச்சம்பழம், இளநீர், முருங்கைக்கீரை, மோர் ஆகியவற்றை தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வது நின்று முடி நன்கு வளரும்.

how to control hair fall using thailam-தலைமுடி தைலங்கள் :

கரிசலாங்கண்ணி தைலம் 

பொன்னாங்கண்ணி தைலம்

நீலி பிருங்காதி தைலம் 

சந்தனாதி தைலம் இவைகள் அனைத்தும் தலை முடி உதிர்வதை தடுத்து முடி செழித்து வளர செய்யும் தைலங்கள் ஆகும்.

தைலங்கள் தயாரிக்கும் முறை:

பச்சையான கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து வடிகட்டி சாற்றுடன் சம அளவு சுத்தமான நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து நீர் சத்து நீங்கும் வரை சுண்டக் காய்ச்சி பிறகு வடிகட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தினமும் தலைக்கு தடவலாம். தலைக்கு தேய்த்து குளிக்கவும் செய்யலாம்.

மருதாணி இலைகளை அரைத்து சிறு சிறு வில்லைகளாக தட்டி நிழலில் உலர்த்தி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் மருதாணி வில்லைகளை மூழ்கும் வரை போட்டு வெயிலில் சில நாட்கள் தினமும் வைத்து எடுத்து வடிகட்டி தலைக்கு தினமும் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தைலங்கள் தயாரிக்கும் போது பொடுதலை இலைச்சாறு கிடைத்தால் சேர்த்து கொண்டால் பொடுகு தொல்லை நீங்கும்.

மருதாணி இலைச்சாறு மற்றும் நீலி அவுரி இலைச்சாறு சேர்த்து தைலம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி கருப்பாக இருக்கும், நரைமுடி தெரியாது.

நாம் தலைக்கு தடவும் சுத்தமான தேங்காய் எண்ணெயில்

வெட்டிவேர்,

விளாமிச்சை வேர்,

கார்போக அரிசி,

உலர்ந்த ரோஜா மொக்கு

சந்தன சிராய்கள்

இவைகளை இடித்து எண்ணெயில் ஊற வைத்து வெயிலில் வைத்து வடிகட்டி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காயுடன்

வெந்தயம்,

பாசிப்பயறு,

பூந்திக்கொட்டை,

உலர்ந்த ரோஜா மொக்கு,

கார்போக அரிசி,

பூலாங்கிழங்கு

ஆவாரம் பூ சேர்த்து அரைத்து பயன்படுத்தினால் நல்ல பலனாக இருக்கும்.


Spread the love

1 thought on “How to control hair fall mens”

  1. Pingback: List of omega-3 foods - ஒமேகா-3 நிறைந்த சத்தான 7 உணவுகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *