Top 5 nuts for PCOD treatment

Spread the love

Top 5 nuts for PCOD treatment

PCOD treatment

PCOD treatment

PCOD பிரச்சனையால் அவதிப்படுபவர்களா? அப்படியென்றால் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நட்ஸ் வகைகளை பற்றி பார்ப்போம்.

polycystic ovary disorder (PCOD) என்பது வலி மிகுந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையாகும். இது அதிக எடை மற்றும் ஹார்மோன் தொந்தரவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. இது இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவருகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பிசிஓடி-யை  சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் கருவுறாமை, நீரிழிவு-2 மற்றும் நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

PCOD பெரும்பாலும் நம் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஏற்படக்கூடியது. இருப்பினும், உங்களின் தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களினாலும் சரியான உணவு முறைகளினாலும் சரிசெய்யலாம்.

Lifestyle changes are needed to manage PCOD

நல்ல கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதோடு மட்டும் இல்லாமல் முறையான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமானது.

தினசரி நட்ஸ், விதைகள் மற்றும் ஒமேகா-3 உள்ள உணவு முறைகள் உடல் எடையை பராமரிப்பது மட்டும் இல்லாமல் ஹார்மோன் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான 5 நட்ஸ்களை பற்றி பார்ப்போம்.

இதையும் படிங்க: weight gain diet plan: follow these home remedies to increase weight

Flax seeds – ஆளிவிதைகள் 

PCOD treatment

ஒமேகா-3 கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் PCOD மற்றும் PCOS-ஆல் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை தடுக்கிறது. இது lignan எனப்படும் ஆன்டிஆக்ஸிடண்ட்டை ஏற்படுத்தி உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் நல்ல கருவுறுதலை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது.

ஆளிவிதைகளை முறையாக தினசரி எடுத்துக்கொண்டால் நுண்ணறைகளை குறைத்து முறையான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

Pumpkin seeds-பூசணி விதைகள்

PCOD treatment

பூசணி விதைகளில் உள்ள அதிகப்படியான நன்மைகளை கருத்தில் கொண்டு பெண்களின் மிக சிறந்த தோழி என்று கூறுவார்கள். மெக்னிசியம் நிறைந்த பூசணி விதைகள் உங்கள் தசை பிடிப்பு வலிகளை சரி செய்வதுடன் முறையான மாதவிடாய் சுழற்சியையும் ஏற்படுத்துகிறது. 

இதில் beta-sitosterol என்ற நொதிகள் இருப்பதால் PCOD-யை எதிர்க்கிறது. இது முடி உதிர்தலையும் தடுக்கிறது. இது உங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகிறது.

Sunflower seeds – சூரியகாந்தி விதைகள்

PCOD treatment

சூரியகாந்தி விதைகளில் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலை படுத்தும் 100 வகையான நொதிகள் உள்ளன.

இந்த விதைகளில் உள்ள நொதிகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சீராக்கி மாதவிடாய் வருவதற்கு முன் ஏற்படக்கூடிய வலி, தைராய்டு மற்றும் கர்ப்பம் உண்டான முதல் மூன்று மாதங்கள் ஏற்படக்கூடிய காலை நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

சூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி6 புரதம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது.

Sesame seeds – எள் விதைகள்(PCOD treatment)

Sesame seeds

பொதுவாக இந்தியாவில் எள்ளை உணவில் சேர்க்கும் பழக்கம் அதிகமாக  உடையவர்கள். எள்ளில் பொட்டாசியம், ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் துத்தநாகம், மெக்னீசியம் நிறைந்துள்ளது.

இது குறைவான கலோரிகளை கொண்டுள்ளதால்  உங்கள் எடையை குறைக்க நல்ல உதவியாக அமைகிறது. இது ஆயுர்வேதத்தில் வெப்பத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுகிறது என்று கூறுகின்றனர்.

Peanuts – நிலக்கடலை (PCOD treatment)

peanuts

நிலக்கடலை அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. இது  உடலுக்கு தேவையான அதிகமான கொழுப்பை தரக்கூடியது. வேர்க்கடலையை தினசரி சாப்பிடுவது நல்ல கொழுப்பை அதிகரிப்பதுடன் தீங்கு விளைவிக்கும் ஆண்ட்ரோஜன் அளவையும் குறைக்கிறது. இது PCOD பிரச்சனைக்கு பங்களிக்கும் பிற ஹார்மோன் மாற்றங்களையும் சரி செய்கிறது.

How many nuts and seeds do you need?

உங்கள் ஆரோக்கியமற்ற அதிகப்படியான உணவு முறைகளே PCOD ஆரம்பத்திற்கான முக்கிய காரணமாகிறது. ஆகையால் உங்கள் உணவு முறைகள் இயற்கையான முறையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் தினசரி நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்வது ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதே நேரத்தில் நட்ஸ் மற்றும் விதைகளை அளவோடு எடுத்துக் கொள்வதும் அவசியம்.

இவற்றை தின்பண்டங்களில் சேர்த்தும் சாப்பிடலாம். தினசரி ஒரு கைப்பிடி அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க: 7 Iron-rich foods that will boost your immune system

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


Spread the love

1 thought on “Top 5 nuts for PCOD treatment”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *