weight gain diet plan: follow these home remedies to increase weight

Spread the love

weight gain diet plan

weight gain diet plan:

weight gain diet plan

இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பதற்கு பல பயனுள்ள வழிமுறைகள் உள்ளன. ஆரோக்கியமான வீட்டு உணவு முறைகள், முறையான உடற்பயிற்சி இவைகளின் மூலம் எப்படி உடல் எடையை அதிகரிக்கலாம் என்று பார்ப்போம்.

Home remedies for weight gain: இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் உணவு முறையும் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். உடல் எடையை அதிகரிக்க சரியான உணவு திட்டமிடலும் உடற்பயிற்சியும் அவசியமாகிறது.

இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரித்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

இயற்கை முறையில் உடல் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.  

home remedies for weight gain

Ashwagandha powder and milk

அஸ்வகந்தா பொடி நம் பாரம்பரிய மருத்துவ முறையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடல் வலிமையை அதிகரிக்கிறது. எலும்புகளை உறுதி படுத்துகிறது. சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. எடை குறைவாக உள்ளவர்கள் அஸ்வகந்தா பொடியை பாலுடன் கலந்து சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.

Banana and Curd

காலை நேரங்களில் வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடுவது  உடல் எடை அதிகரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் காலை நேரத்தில் பால் சாப்பிட்டால் சீரான குறைபாடு ஏற்படும் என்பவர்கள் பாலுக்கு பதிலாக தயிருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை இயற்கையாக அதிகரிக்கும்.

Shatavari and milk

சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு ) நம் பாரம்பரிய வைத்திய முறையில் அதிகம் பயன்படுத்தும் மூலிகை ஆகும். சதாவரி பொடியை  பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் எடை இயற்கையாக அதிகரிக்கும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியை சாப்பிடும் போது புரத சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Dates

பேரிச்சம்பழம் உடல் எடை அதிகரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. பேரீச்சையை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் விரைவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். தினமும் 5 பேரீச்சை சாப்பிட வேண்டும். 

weight gain diet plan

High calories:

உடல் எடையை அதிகரிக்க அதிக கலோரிகள் உள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். இதில் உருளைக்கிழங்கு, கிரீம் உள்ள பால், தயிர், வெண்ணெய், வெல்லம் சாப்பிடலாம். அதனுடன் மாம்பழம், வாழைப்பழம், பேரிச்சை சேர்த்து சாப்பிடலாம்.

சுத்தமான தேன் வீட்டில் காய்ச்சிய நெய், வெண்ணெய் மற்றும் பாலுடன் தேன் சேர்த்து சாப்பிட நல்ல உடல் எடை அதிகரிக்கும்.

Healthy fat:

எடையை அதிகரிக்க நாம் உண்ணும் உணவில் நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம்.

இது உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். நல்ல கொழுப்பை சேர்ப்பதற்காக எள், வேர்க்கடலை, பாதாம், அக்ரூட், பிஸ்தா பருப்பு, சூரியகாந்தி விதைகள் (sunflower seeds), ஆளி விதை (flax seed) இவைகளை சேர்த்துக்கொள்வது அவசியம்.

அதேபோல் எள் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.  

Healthy fat

Fruits and Vegetables for weight gain:

பழங்களில் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா பழம், திராட்சை, ஆப்பிள், பேரிட்சை இவைகளை சாப்பிடலாம். காய்கறிகளில் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற மண்ணுக்கடியில்  விளையும் காய்கறிகள் உண்ணலாம். 

High protein diet:

உடல் எடை குறைவதால் தசைகள் பலவீனமாகிறது. ஆகையால் தசைகளை பலப்படுத்த புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகமாக பருப்பு வகைகள், நாட்டு கொண்டைக்கடலை, பீன்ஸ் வகைகள், கடல் மீன், இறைச்சி, தயிர் மற்றும் நாட்டு முட்டைகளை சேர்த்து கொள்ளலாம்.

Eat small meals:

உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்பவர்கள் உணவுகளை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நேரம் இடைவெளி விட்டு சாப்பிடுவது அவசியம்.

ஒரே நேரத்தில் அதிக உணவுகளை உட்கொண்டால் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று பிரச்சனைகள் வரக்கூடும்.  

Lifestyle for weight gain

எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்தால் தான் நல்ல கொழுப்பு  சேரும். தசைகளை வலுவாக்கும்.

யோகா மனஅழுத்தையும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் உதவி செய்கிறது.

உடல் எடையை இயற்கையாக அதிகரிக்க வேண்டும் என்றால் junk foods ஐ தவிர்ப்பது மிகவும் அவசியம்.

தினமும் உடல் எடை அதிகரிப்பதற்கான உணவு முறைகளை  அட்டவணைப் படுத்துங்கள். இது உங்கள் இலக்கை அடைய உதவியாக இருக்கும்.

இயற்கை முறையில் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்பதற்கு சில நாட்கள் ஆகலாம். பொறுமை இழக்காமல் முயற்சி செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


Spread the love

3 thoughts on “weight gain diet plan: follow these home remedies to increase weight”

  1. Pingback: 7 Iron-rich foods can boost your immune system

  2. Pingback: Pumpkin Seed Benefits for health - RITHANYA STORES

  3. Pingback: பிசிஓடி பிரச்சனையை சரி செய்யும் நட்ஸ் மற்றும் விதைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *