What is Badam Pisin?

Badam Pisin Benefits in Tamil பாதாம் பிசின் (Badam Gum) என்பது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய இயற்கையான பிசின் ஆகும்.

இந்த பாதாம் பிசினில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் உள்ளது. பிசினை தண்ணீரில் ஊறவைத்தால் ஜெல்லி போன்று இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சி அடைய செய்வதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான நன்மைகளை தருகின்றது. இது தென்மேற்கு ஆசியா, ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் கிடைக்கின்றது.

Badam Pisin Benefits in Tamil
Badam Pisin Benefits in Tamil

Benefits of Badam Pisin:

பாதாம் பிசினில் 92.3% கார்போஹைட்ரேட், புரதம் 2.4% மற்றும் கொழுப்பு 0.8% இதனுடன் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு சத்து மற்றும் மெக்னிசிய சத்துக்களும் அதிகமாக உள்ளது. பாதாம் பிசின் இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Badam Pisin Benefits for Digestion and Gut Health:

பாதாம் பிசின் வயிற்றில் அமிலத்தன்மையை குறைத்து ஜீரணத்தை எளிதாக்குகிறது. பிசினில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பை தடுக்கிறது.

இது இயல்பான குடல் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கிரகிக்கின்ற தன்மையை ஏற்படுத்துகிறது.

Badam Pisin Benefits for Weight Loss:

பாதாம் பிசினில்  உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதற்க்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி உணர்வை குறைக்கிறது. இதனால் நொறுக்கு தின்பண்டங்கள் சாப்பிடுவதற்கான எண்ணங்கள் குறைகின்றது.

பாதாம் பிசினில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் குறைவான கலோரிகள் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வோடு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Badam Pisin Benefits for Cholesterol Control:

அதிகப்படியான கொழுப்பு சேர்தல் இதய நோய்க்கான முக்கிய காரணியாக அமைகிறது. ஆனால் பாதாம் பிசினில் உள்ள நார்ச்சத்தானது கரையக்கூடியதாக இருப்பதால் கொழுப்பையும் சேர்த்து சீரணிக்க செய்கிறது. இதனால் இரத்ததில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கிறது.

பாதாம் பிசின் இரத்த நாளங்களை தளர்வடைய செய்வதால் இரத்த ஓட்டங்கள் சீராக இருக்கின்றது. ஆகையால் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகின்றது. இரத்த அழுத்தம் குறைவதற்கான காரணியாக பாதாம் பிசின் இருப்பதால் இதய தொடர்பான குறைபாடுகள் தவிர்க்கப்படுகிறது.  

சப்ஜா விதை நன்மைகள்: உடல் எடை குறைய, மலச்சிக்கல் தீர

Badam Pisin Benefits for Bones And Joints:

பாதாம் கோந்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வளமான தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது எலும்புகளை வலுவான மற்றும் ஆரோக்கியமானதாக பராமரிக்க உதவுகிறது. இந்த பிசின் மூட்டு வலியை குறைத்து மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எலும்புகளின் தேய்மானத்தை குறைப்பதோடு எலும்புகளின் அடர்த்தியை பராமரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. 

Badam Pisin Benefits for Skin and Hair Health:

பாதாம் பிசினில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் free radicals ஐ எதிர்த்து போராடுகிறது. ஆகையால் முதுமை தோற்றத்தை தடுக்கிறது மற்றும் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது.

தலைமுடிக்கு தேவையான் ஊட்டச்சத்துக்கள் அதிகமான அளவில் பாதாம் பிசினில் இருப்பதால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை கொடுக்கின்றது  மற்றும் முடி உதிர்வையும் தடுக்கிறது.

How to make Almond Gum Jelly?

தேவையான பொருட்கள்:

ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறு துண்டு பாதாம் பிசின்.

செய்முறை:

ஒரு சிறு துண்டு பாதாம் பிசினை முதலில் தண்ணீரில் கழுவவேண்டும். பிறகு அரை  டம்பளர் சுத்தமான தண்ணீரில் பாதாம் பிசினை இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். ஊறிய பாதாம் பிசின் ஜெல்லி போல வரும். இதை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது பழச்சாறுகளிலும் கலந்து சாப்பிடலாம்.

முக்கிய குறிப்பு: பாதாம் பிசின் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகளை தருகின்றது. ஆகவே நாம் தினசரி அளவோடு பாதாம் பிசினை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் ஆகையால் ஒரு சிறந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று அளவோடு எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

BUY BADAM PISIN

சப்ஜா விதை நன்மைகள்

சப்ஜா விதை நன்மைகள்

திருநீற்று பச்சிலை மூலிகை செடியில் இருந்து எடுக்கப்படும் விதைகள்தான் சப்ஜா விதை ஆகும். சப்ஜா விதை மற்றும் சாலியா விதை இரண்டும் ஒன்று என்று நினைப்பவர்களுக்கு ஒரு உண்மை என்னவென்றால் இரண்டு விதைகளும் வெவ்வேறு விதைகளாகும். சப்ஜா விதை கருப்பு நிறத்தில் இருக்கும். சப்ஜா விதை பயன்கள் பற்றி பார்ப்போம்.

சப்ஜா விதை நன்மைகள் 

  • உடல் எடையை  குறைக்கிறது.
  • மலச்சிக்கலை போக்கும்.
  • உடல் சூட்டை தணிக்கும்.
  • வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற்றும்.
  • நீரிழிவை கட்டுப்படுத்தும்.
  • கொழுப்பை குறைக்கும்.

உடல் சூட்டை குறைக்க: சப்ஜா விதை நன்மைகள் 

கொளுத்தும் கோடை வெயிலின் வெப்பத்தை சமாளிக்க சப்ஜா விதை உதவியாக இருக்கும். சப்ஜா விதை உங்கள் உடல் உஷ்ணத்தை தணிக்கும் செயலை செய்வதால் குளிர்பானங்கள், சர்பத், மோர் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது.

மலச்சிக்கல் தீர: சப்ஜா விதை நன்மைகள்

சப்ஜா விதை நன்மைகள் 

சப்ஜா விதை உங்கள் குடல் இயக்கங்களை மென்மையாக்குகிறது. தினசரி இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் சிறிது சப்ஜா விதைகளை போட்டு குடிக்கவும். இதில் உள்ள எண்ணெய் தன்மை இரைப்பை குழாயில் உள்ள வாயுவை வெளியேற்றுகிறது.

சப்ஜா விதைகள் நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கலை போக்குவதுடன் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று கடுப்பு இவைகளையும் சரியாக்குகிறது.

உடல் எடை குறைய

சப்ஜா விதை நன்மைகள் 

சப்ஜா விதைகளில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

சப்ஜா விதை நன்மைகள் 

ஆய்வுகளின் படி, சப்ஜா விதைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் ஒரு நாள் முழுவதற்குமான இன்சுலின் அளவை அதிகப்படுத்தும். 

இதையும் படிங்க:
சூரியகாந்தி விதை நன்மைகள்: ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்

சரும பாதுகாப்பிற்கு

சப்ஜா விதைகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகமாக உள்ளதால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகின்றது.

ஒரு ஸ்பூன் சப்ஜா விதை பொடியையும் தேங்காய் எண்ணையையும் கலந்து அரிப்பு, படை, சொறி உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்ச்சிக்கு

முடி வளர்ச்சிக்கு

திருநீற்று பச்சிலை துளசி விதைகளில் (சப்ஜா விதை) உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி உதிர்வதையும் தடுக்கிறது. சப்ஜா விதைகள் மற்றும் நெல்லிக்காய் பொடி இரண்டையும் சம அளவு கலந்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தலை முடியில் தடவவும். சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

sabja seed/சப்ஜா விதை வாங்க 

Flax seed/Aali vithai/ஆளி விதை வாங்க 

halim seeds / saliya vithai – சாலியா விதை வாங்க 

pumpkin seeds / poosani vithai / பூசணி விதை வாங்க 

ஜாதிக்காய் பொடி பயன்கள்

ஜாதிக்காய் பொடி பயன்கள்

நம் நாட்டில் குழந்தைகளுக்கு சளி-இருமல்-சுரம் – வயிறு  உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் இருந்தால் தாய்மார்கள் ஜாதிக்காயினை வெந்நீர் அல்லது தாய்ப்பாலில் இழைத்து நாக்கின் மீது தடவுவார்கள். வயிற்றுக் கோளாறு இருந்தால் வயிற்றின் மீது பற்று போடுவார்கள்.

அதுமட்டுமல்ல நம் உணவு பொருட்களில் சமையலின் போது பயன்படுத்தும் மசாலா பொருட்களில் சாதிக்காயும் ஒன்று. ஜாதிக்காய் நம் உணவு வகைகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் மசாலா பொருள்களிலும், சிலவகை இனிப்பு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது. 

இதனால் உண்ட உணவு எவ்வளவு கடினத் தன்மை கொண்டதாக இருந்தாலும் எளிதில் செரிமானம் ஆகி விடுகிறது. 

இத்தகைய பயனுள்ள ஜாதிக்காய் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஜாதிக்காய் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

ஜாதிக்காய் என்றால் என்ன?

சாதிக்காய் என்றும் ஜாதிக்காய் என்றும் சொல்வார்கள். இது மலைப்பாங்கான குளிர்ச்சியான இடங்களில் வளரும் ஒரு வகை மரத்தின் காய். இந்த காய் பழுத்தபின் சதைப்பற்றாக இருக்கும். தமிழகத்தில் ஏற்காடு, குற்றாலம், கொல்லிமலை, போன்ற குளிர்ச்சியான மலை பிரதேசங்களில் அதிகமாக விளைகின்றது.

இந்த காயின் மேல் தோலை அப்படியே துண்டுதுண்டாக அரிந்து மாங்காய், எலுமிச்சம்பழம் போன்று ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருப்பதோடு ஜாதிக்காயின் நன்மைகளை அடையாளம்.

ஜாதிக்காய் நன்மைகள்: Nutmeg benefits in tamil

  • வலியை குறைக்கிறது.
  • நல்ல தூக்கத்தை அளிக்கிறது.
  • செரிமானத்தை அளிக்கிறது.
  • மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
  • வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
  • அழகான தோல் பராமரிப்புக்கு உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

ஜாதிக்காயினால் மயக்கம், பித்தம், வாந்தி, பேதி, பலகீனம், இருமல், இரைப்பு நீங்கும். உடலுக்கு வெப்பத்தை தரும். சீரான சக்தியை அதிகப்படுத்தி சுறுசுறுப்பை தரும்.

ஜாதிக்காய் பொடி பயன்கள்: Jathikkai powder benefits

சாதிக்காயை இடித்து நன்றாக பொடி செய்து கொண்டு அரை ஸ்பூன் பொடியை 100 ml தயிரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்தவிதமான பேதியானாலும் உடனே கட்டுப்படும். தொடர்ந்து 2 அல்லது 3 வேளை சாப்பிட அறவே பேதி நின்றுவிடும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் பேதிக்கு ஜாதிக்காய் பொடி கலந்த தயிரை மெல்லிய துணியில் முடிச்சு கட்டி வடியும் நீரை சேகரித்து வேளைக்கு 30ml அளவு தொடர்ந்து 2 அல்லது 3 வேளை கொடுத்தால் சரியாகும். இவ்வாறு செய்வதால் பேதி கட்டுப்படுவது மட்டும் இல்லாமல் நீர்வேட்கை, நாவறட்சி, உடல் வறட்சி, நீர் சத்து குறைவினால் ஏற்படும் டிஹைட்ரேஷன் ஆகியவையும் சரியாகும்.

கோடைகாலத்தில் உடலில் உஷ்ணம் அதிகரித்த நிலையில் உண்டாகும் பேதியை உஷ்ணபேதி (summer diarrhoea) என்பர். மேற்கூறிய முறையை இந்த உஷ்ண பேதிக்கு பயன்படுத்தி பலன் அடையாளம். 

மசக்கை வாந்தி நிற்க: ஜாதிக்காய் பொடி பயன்கள் 

கருவுற்ற காலத்தில் தாய்மார்களுக்கு உண்டாகும் மசக்கை வாந்திக்கு சாதிக்காய் சூரணத்தை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் காலை, மாலை இரண்டு வேளை உணவுக்கு பின் தேனில் குழைத்து சாப்பிட்டால் மசக்கை வாந்தி நிற்கும்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு: ஜாதிக்காய் பொடி பயன்கள் 

ஜாதிக்காய் பொடியை தினசரி இரவு படுக்குமுன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் பசும்பாலுடன் சாப்பிட்டுவர நல்ல தூக்கம் வருவதுடன் மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழக் காணலாம். அத்துடன் மலசிக்கல் நீங்கி மலம் வெளியேறும்.

கண் பார்வை திறன் அதிகரிக்க: ஜாதிக்காய் பொடி பயன்கள் 

சாதிக்காயை நல்ல தண்ணீரில் சந்தனம் இழைப்பது போன்று உரைத்து தினசரி இரவு படுக்குமுன் கண் இமைகளின் மீது லேசாக பூசி படுக்க கண் நோய்கள் குணமாகும். கண் பார்வை திறன் அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும்.

வாய் நாற்றம் போக்க: ஜாதிக்காய் பயன்கள் 

ஜாதிக்காயை வெற்றிலை பாக்குடன் சேர்த்து உபயோகிக்க ஜாதிக்காயின் பலன்களை அடையாளம். உண்ட உணவு எளிதில் சீரணமாகும். வாய் நாற்றம் நீங்கும். 

ஞாபக சக்தியை அதிகரிக்க: ஜாதிக்காய் பயன்கள் 

ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்து 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி, உறக்கமின்மை, விக்கல், குமட்டல்,ஒழுங்கற்ற இதய துடிப்பு, படபடப்பு குணமாகும். 

சாதிக்காய் வாயுவை போக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும்.

உயிரணுக்கள் அதிகரிக்க: ஜாதிக்காய் பொடி பயன்கள்  

சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் சூரணங்களிலும், லேகியங்களிலும் ஜாதிக்காய் சேர்க்கப்படுகிறது. ஜாதிக்காய் ஆண்மையை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு தளர்ச்சி, ஆண்மைக் கோளாறுகள், மலட்டுத்தன்மை போன்றவற்றை ஜாதிக்காய் போக்குகிறது.

திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தால் அதற்கு ஆண் காரணம் என்றாலும் அவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருந்தால் ஜாதிக்காயை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு காலை, மாலை உணவிற்கு பின் தேனில் குழைத்து சாப்பிட்டு வர விந்துவில் உயிரணுக்கள் உற்பத்தியாகி, விந்தணு, உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெரும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. 

வாயு தொல்லை, மலச்சிக்கல் சரியாக: ஜாதிக்காய் பொடி நன்மைகள்  

வாயு தொல்லை, மலச்சிக்கல் சரியாக: ஜாதிக்காய் பொடி நன்மைகள்  

நம்மில் பலருக்கு வாயுத் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சீரணம் ஆகாது. பசி இருக்காது. மலச்சிக்கலும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு கை கொடுக்கும் தோழனாக ஜாதிக்காய் விளங்குகிறது.

சீரகம், சுக்கு, ஜாதிக்காய் மூன்றையும் சம எடை எடுத்து இடித்து சலித்து சூரணமாக்கி அதற்கு சம அளவு சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு வேளையும் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் வெந்நீருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர மேற்சொன்ன தொல்லைகள் நீங்கி நலமடையலாம்.

தலைமுடி செழித்து வளர: ஜாதிக்காய் பொடி பயன்கள்

ஜாதிக்காயையும், கடுக்காயையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தலைக்கு பூசி குளித்துவர உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். தலைமுடி உதிர்தல் நிற்கும். அதுமட்டும் இல்லாமல் தலைமுடியும் நன்கு செழித்து வளரும். 

இதையும் படிங்க:

கடுக்காய் பொடி நீரிழிவு நோயை தடுக்க – kadukkai podi Prevent diabetes 

ஜாதிக்காய் பக்க விளைவுகள்

ஜாதிக்காயை ஏராளமான மருத்துவ நன்மைகள் இருந்தாலும் அளவோடு பயன்படுத்த வேண்டும். முக்கியமாக சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொண்டால் முழு பலனையும் அடையாளம்.

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
curry leaf benefits

கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்

கறிவேப்பிலை நம் சமையலில் முக்கிய இடம் பிடிக்கிறது. இதன் நறுமணத்திற்காக சமையலில் அதிகம் பயன்படுத்தினாலும் இதில் ஏராளமான  மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.

இதில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடுகிறது. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் சருமத்தை உயிர் சத்துடன் இருக்க உதவுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள் பற்றி பார்ப்போம்.

100 கிராம் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

ஆற்றல்  :  108 kcal

புரதம்     :   6.1 gram 

பைபர்   :  6.4 gram  

பாஸ்பரஸ் : 57 mg  

கால்சியம் : 830 mg 

இரும்பு    :  0.93 mg 

மெக்னீசியம் : 44 mg 

கரோட்டின்  : 7560 μg

நியாசின்  : 2.3 mg 

வைட்டமின் சி : 4 mg 

போலிக் அமிலம் : 23.5 μg

இதையும் படிங்க:

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: பூண்டு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?

இரத்த சோகையை தடுக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள் 

கறிவேப்பிலையில் இரும்பு சத்து, போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளது. போலிக் அமிலம் உணவில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்சி உடலுக்கு கொடுப்பதற்கு உதவி புரிகிறது. இதில்  இரண்டு சத்துக்களும் நிறைந்துள்ளதால் இயற்கையான முறையில் உங்கள் இரத்த சோகையை போக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்

கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டும் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலை சாப்பிடுவதால்  இன்சுலின் செயல்பாட்டை சீராக்கி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவை குறைப்பதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. இயற்கை முறையில் சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவோர் தினமும் காலையில் கருவேப்பிலை சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும். 

செரிமானத்தை அதிகரிக்க 

கருவேப்பிலை செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. இது உடல் எடை குறைய வழி செய்கிறது. உடல் எடை அதிகரிப்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்பதால் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

கொழுப்பை குறைக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள் 

தினசரி உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதால் இரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்கும் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் LDL கெட்ட கொழுப்பை குறைத்து HDL நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய் வரும் அபாயத்தையும் குறைக்கிறது. 

முடி உதிர்தலையும், இளநரையையும் குறைக்கிறது 

கறிவேப்பிலை இளநரையை தடுக்கிறது. முடி உதிர்தலையும் தடுக்கிறது. மெலிந்த கூந்தலுக்கு வலிமை சேர்க்கிறது. தலை முடி வேர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து முடி உதிர்வதை தடுக்கிறது. கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன் அடையாளம்.

இதையும் படிங்க:

Hair fall reason in Tamil-தலைமுடி உதிர்தலுக்கான காரணங்கள்: 

புற்றுநோய் வராமல் தடுக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள் 

புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பினோல்கள் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் இருப்பது நல்ல பலன் கொடுக்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.   

பல்லுக்கு கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள் 

கறிவேப்பிலையில் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக உள்ளதால் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை  பாதுகாப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. கறிவேப்பிலை எண்ணெய் ஈறுகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. வாய் நாற்றத்தையும் போக்குகிறது. மேலும் நுண்ணுயிர்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. 

இதய ஆரோக்கியத்தை காக்க: கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள் 

இதில் உள்ள அதிகப்படியான அல்கலாய்டுகள் பல இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலை மன அழுத்தத்தை குறைத்து இதய அமைதியை அதிகரிக்கிறது. இது இதய படபடப்பை குறைக்கிறது. கறிவேப்பிலையை தினசரி சாப்பிடுவதால் இதய தசைகளை வலுப்படுத்துகிறது. இரத்தத்தில் உண்டாகும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.இது மாரடைப்பு மற்றும் இரத்த கட்டிகள் வருவதையும் தடுக்கிறது.

மூளை செயல்பாட்டை அதிகரிக்க

கறிவேப்பிலை மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள பயோஆக்டிவே கூறுகளின் தன்மை மூளை ரசாயனங்கள் glutathione reductase (GRD), glutathione peroxidase (GPx), மற்றும் superoxide dismutase (SOD) உள்ளிட்ட  நினைவகங்களை அதிகரிக்க செய்கிறது. ஆகையால் இது உங்களின் நினைவாற்றல், கவனம், சிந்தனை, விவேகத்திறன் இவற்றை அதிகரிக்கிறது. ஆகையால் தினசரி உங்கள் உணவில் கறிவேப்பிலையை தவறாமல் சேர்த்துக் கொள்வது சிறந்த டானிக் மற்றும் நல்ல தூண்டுதலாகவும் இருக்கிறது. இது அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்கள் வராமல் தடுக்கிறது. 

சுவாச கோளாறுகளுக்கு கறிவேப்பிலையின் நன்மைகள் 

இதில் அதிகமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் expectorant பண்புகள் சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது மூக்கில் இருந்து ஒழுகும் சளி மற்றும் நீர் இவற்றை தடுக்கிறது. இது சைன்ஸ், தலைவலி, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி இவற்றிக்கு சிறந்த நிவாரணம் அளிக்க உதவுகிறது.

கறிவேப்பிலை பொடி பயன்கள் 

பச்சையாக பறித்த கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து நன்கு உலர்த்தி பொடியாக அரைத்து சலித்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

  • தினமும் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாக குறைய செய்யும்.
  • பொடியை ஒரு ஸ்பூன் அளவு மோரில் கலந்து குடிப்பதால் இரைப்பை குடல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
  • கறிவேப்பிலை வேர் பொடி சேர்த்து கொண்டால் சிறுநீரக கோளாறுகள் சரியாகும் என்று கூறப்படுகிறது.

கறிவேப்பிலை சாறு நன்மைகள் மற்றும் செய்முறை 

கறிவேப்பிலை மருத்துவ நன்மைகள்
தேவையான பொருட்கள்:
  • பச்சை கறிவேப்பிலை : ஒரு கைப்பிடி
  • புதினா இலைகள்          : தேவையான அளவு  
  • தண்ணீர்                          : 3 டம்ளர் 
  • எலுமிச்சை                      : பாதி அளவு 
  • இலவங்கப்பட்டை பொடி : ஒரு ஸ்பூன்
  • சுத்தமான தேன்   :  2 ஸ்பூன்  

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கறிவேப்பிலை, புதினா, இலவங்கப்பட்டை இவற்றை போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்த பிறகு அதை வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய சாறில் எலுமிச்சை சாறும் தேனையும் கலக்க வேண்டும்.

ஒரு கிளாசில் சாற்றை ஊற்றி சூடாக இருக்கும் போதே பருகவும்.

கறிவேப்பிலை சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினசரி இந்த சாறு குடித்து வந்தால் நல்ல நம்பிக்கைக்குரிய பலன் அடையாளம்.

கறிவேப்பிலை பக்க விளைவுகள்:

இதிலும் மற்ற மூலிகைகளை போலவே சில ஒவ்வாமைகளும் இருக்கின்றன. எனவே மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்வது சிறந்த ஆரோக்கிய நன்மைகளை தரும். அலர்ஜி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. 

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

உணவில் பூண்டு சேர்ப்பது சுவையை அதிகரிப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. நம்முடைய பாரம்பரிய வீட்டு வைத்திய முறையில் பூண்டு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூண்டு ட்ரிகிளிசரைடுகளை குறைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் குறைத்து உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

இது நல்ல பாலுணர்வை அதிகரிக்க செய்கிறது. பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

What you need to know about garlic

பூண்டு மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இது மசாலா மற்றும் சுவையூட்ட கூடிய பொருளாக மட்டும் இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதன் தனித்துவமான மணம் மற்றும் சுவை உலக அளவில் ஆசிய, ஐரோப்பிய முதல் லத்தீன் அமெரிக்க வரை பல உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: 30 grams வறுத்த சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

Garlic its relation with sexual drive

பூண்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு பாலியல் உணர்வையும் அதிகரிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதற்கு காரணம் பூண்டில் அல்லிசின் கலவை உள்ளதே ஆகும்.

இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் இது ஒரே நாளில் பலனை பெற முடியாது. குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு தினசரி சாப்பிட்டால் மட்டும் குறிப்பிட தக்க பலனையும் ஆண்மையையும் அடைய முடியும்.

Benefits of garlic for men: பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இதில் வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பூண்டு இருதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய இடம் பிடிக்கின்றது. பூண்டில் உள்ள அல்லிசின் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

பூண்டின் அதிகப்படியான நன்மையை அடைய பச்சையாக உட்கொள்ளலாம், அல்லது பூண்டு சூப், பூண்டு குழம்பு, பூண்டு சட்னி போன்ற உணவு பண்டங்களில் சேர்த்து சாப்பிடலாம்.

Benefits of garlic for women: பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

பூண்டு பெண்களின் உணர்ச்சியை அதிகரிக்கும் செயலை செய்கிறது. இது ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவு என்பதால் பெண்களின் பாலியல் ஹார்மோன்கள் அதிகரிக்க செய்கிறது. 

சந்தையில் பல supplements கிடைக்கின்றன. அதில் சரியானவை எவை என்று பார்த்து சரியான அளவு தினசரி எடுத்துக் கொண்டால் நல்ல பலன் அடையலாம்.  

Conclusion

ஆண் மற்றும் பெண் இருபாலரின் உணர்ச்சிகளை அதிகரிப்பதற்கான பண்புகளை அதிகம் கொண்டுள்ளது. ஆகையால் தினசரி சரியான அளவு பூண்டை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனை தரும். அதோடு மட்டும் இல்லாமல் தம்பதிகளுக்கிடையே ஒரு நல்ல புரிதலையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சூரியகாந்தி விதை நன்மைகள்

சூரியகாந்தி விதை நன்மைகள்

உங்கள் தினசரி உணவு முறைகளில் விதைகள் மற்றும் நட்ஸ்களை சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும். ஏனென்றால், அவை சத்தானவை, ஆரோக்கியமான மற்றும் உங்கள் நாள்பட்ட நோய்களிலிருந்து காக்கிறது.

சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.

சூரியகாந்தி விதைகள் வீக்கம், நீரிழிவு – 2, இதயநோய்கள் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

பொதுவாக சூரியகாந்தியில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று எண்ணைக்காகவும் மற்றொன்று விதைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சூரியகாந்தி விதை நன்மைகள் பற்றி பார்ப்போம்.

Nutrition content of sunflower seeds

சூரியகாந்தி விதைகள் சிறியதாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்தது. உங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அவற்றில் அடங்கியுள்ளன.

குறிப்பாக வெள்ளை விதைகளில் வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய செல்களின் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து காக்கிறது.

இந்த விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் நாள்பட்ட நோய்களும் வராமல் தடுக்கிறது. இதில் பினோலிக் அமிலம் மற்றும் flavonoids- ம் உள்ளன.

30 grams வறுத்த சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

கலோரிகள் : 163

கொழுப்புகள் : 14 grams 

புரதம் : 5.5 grams 

கார்போஹைட்ரேட் : 6.5 grams 

பைபர் : 3 grams 

வைட்டமின் ஈ : 37% of the RDI 

நியாசின் : 10% of the RDI 

வைட்டமின் பி6 : 11% of the RDI 

இரும்பு : 6% of the RDI 

மெக்னிசியம் : 9% of the RDI 

துத்தநாகம் : 10% of the RDI 

இதையும் படிங்க: Pumpkin Seed Benefits for health

சூரியகாந்தி விதை நன்மைகள்: Sunflower seeds benefits for inflammation

இந்த விதைகள் வீக்கத்தை குறைக்கிறது. இதய நோய்கள் மற்றும் நீரிழிவு 2 போன்ற பல நாள்பட்ட நோய்களை குறைக்கிறது. 6000 பெரியவர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், சூரியகாந்தி விதைகள் மற்றும் சில விதைகளை சேர்த்து சாப்பிடுபவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது C – reactive புரதம் 32 சதவிகிதம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

விதைகளின் அதிகப்படியான நன்மைகளுக்கு இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஈ என்று நம்பப்படுகிறது.

சூரியகாந்தி விதை நன்மைகள்: Sunflower seeds benefits for heart disease

சூரியகாந்தி விதைகளில் இரத்தக்குழாய் சுருக்கங்களை உண்டாக்கக்கூடிய நொதிகளை அழிக்கக்கூடிய கலவை உள்ளது. இது இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

விதைகளில் உள்ள மெக்னீசியம் தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.

How to eat sunflower seed for diabetes

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக அவசியம். இதற்கு சூரியகாந்தி விதைகள் உதவியாக இருக்கின்றன. 

பல ஆய்வுகளில் இந்த சிறிய விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி ஒரு கைப்பிடி அளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் 10 சதவிகிதம் உணவிற்கு முன் உள்ள  இரத்த சர்க்கரை அளவு குறையும். இது அடிப்படையில் தாவர கலவை chlorogenic அமிலத்தால் உண்டாகிறது.

இதையும் படிங்க: சாலியா விதையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Sunflower seeds for immunity system

சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம் உள்ளதால் உங்கள் உடலில்  300 என்சைம்களை உருவாக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

இதில் செலினியம் மற்றும் பிற வைட்டமின்கள் இருப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் தொற்று நோய்களை எதிர்த்து பாதுகாக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கிறது.

நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உள் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏற்படுத்துகிறது. 

Reduce the risk of cancer

உலக அளவில் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. புற்றுநோய் உயிரணுக்களை முழுமையாக அழிக்க எதுவும் இல்லை என்றாலும் உங்கள் ஊட்டச்சத்துள்ள உணவு முறைகள் வராமல் தடுக்கலாம்.

சூரியகாந்தி விதைகளில் beta-sitosterol, phytosterol இருப்பதால்  மார்பக புற்று உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இந்த விதைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்று ஏற்படுவதையும் தடுக்கிறது.

Reduces cholesterol

sunflower seeds-ல்  உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு அல்லது LdL கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நியாஸின் அல்லது வைட்டமின் பி 3 உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

இந்த விதைகளில் உள்ள வைட்டமின் பி 5 HDL கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

Increase brain funtion

இந்த விதைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் மூளையின் செயல்திறன் மற்றும் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் பி6 உங்கள் மனநிலையை அமைதியாகவும் நல்ல நினைவாற்றலையும் சிறந்த கவனிப்பு திறமையையும் அதிகரிக்க உதவுகிறது.

இதை உணவில் சேர்க்கும் பெண்களின் மாதவிடாய் வருவதற்கு முன் வருகின்ற நோய்கள் (PMS) குறைகிறது.

How to eat sunflower seed: Good for the skin

இந்த விதைகளில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளானை எதிர்க்கும் தன்மை உங்கள் முகத்தில் முகப்பரு வராமல் சருமத்தை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைக்கிறது.

சூரியகாந்தி விதைகளில் உள்ள Oleic மற்றும் Linoleic அமிலம் collagen உருவாவதற்கு உதவுகிறது. இது வயதான தோற்றத்தை குறைத்து சருமத்தை இளமையுடன் இருக்க செய்கிறது.

Are there any side effects from eating sunflower seeds?

பொதுவாக சூரியகாந்தி விதைகள் உங்கள் உடலுக்கு நன்மை என்றாலும் சிலருக்கு ஒவ்வாமை உண்டாக்கலாம். சூரியகாந்தி விதைகளை உட்கொண்டால் உண்டாகும் பக்க விளைவுகளை பற்றி பார்ப்போம்.

சிறிய வெள்ளை விதைகளில் கால்சியம், கலோரிகள் அதிகம் அதேபோல் சோடியம் அதிக அளவில் உள்ளது. நீங்கள் சோடியம் மற்றும் கலோரி அளவுகளுக்காக சிகிச்சை பெறுபவர் என்றால் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது அவசியம்.

சிறிய விதைகள் பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டுள்ளது. அதே சமயம் காட்மியம்  அதிகமாக உள்ளது. ஆகையால் அதிகமாக விதைகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும். சராசரியாக 70 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு 490 micrograms அளவுக்கு மிகாமல் காட்மியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

நீங்கள் விதைகளை மேல் உள்ள ஓட்டுடன் சாப்பிடுவதால் ஏற்படும். சிலர் வேண்டுமென்றே ஓட்டுடன் சாப்பிடுவார்கள் இது செரிமானத்திற்கு கடுமையாக இருக்கும். அதேபோல அதிகமாக விதைகளை எடுத்துக் கொண்டால் வாந்தி கூட  உண்டாக்கலாம்.

சிலர் சூரியகாந்தி விதைகளை உட்கொண்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வாயில் அரிப்பு, தோல் வெடிப்பு, புண்கள், வாந்தி போன்றவை ஏற்படலாம்.

The perfect way to eat sunflower seeds

இரண்டு வகையான சூரியகாந்தி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஓட்டுடன் ஒரு விதையும்  ஓடு நீக்கிய ஒன்றும் கிடைக்கின்றன. இதில் ஓட்டுடன் இருப்பதை ஓடு நீக்கியபின் சாப்பிடலாம். ஓடு இல்லாமல் வாங்கினால் அப்படியே சாப்பிடலாம். ஓடு நீக்கிய விதைகள் மற்ற உணவுப் பண்டங்களுடன் சேர்த்து சாப்பிட எளிதாக இருக்கும். இதை வறுப்பதால் இதில் உள்ள வேதிப்பொருட்கள் நீங்கிவிடும். ஒருவர் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Top 5 nuts for PCOD treatment

PCOD treatment

PCOD treatment

PCOD பிரச்சனையால் அவதிப்படுபவர்களா? அப்படியென்றால் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நட்ஸ் வகைகளை பற்றி பார்ப்போம்.

polycystic ovary disorder (PCOD) என்பது வலி மிகுந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையாகும். இது அதிக எடை மற்றும் ஹார்மோன் தொந்தரவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. இது இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவருகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பிசிஓடி-யை  சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் கருவுறாமை, நீரிழிவு-2 மற்றும் நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

PCOD பெரும்பாலும் நம் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஏற்படக்கூடியது. இருப்பினும், உங்களின் தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களினாலும் சரியான உணவு முறைகளினாலும் சரிசெய்யலாம்.

Lifestyle changes are needed to manage PCOD

நல்ல கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதோடு மட்டும் இல்லாமல் முறையான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமானது.

தினசரி நட்ஸ், விதைகள் மற்றும் ஒமேகா-3 உள்ள உணவு முறைகள் உடல் எடையை பராமரிப்பது மட்டும் இல்லாமல் ஹார்மோன் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான 5 நட்ஸ்களை பற்றி பார்ப்போம்.

இதையும் படிங்க: weight gain diet plan: follow these home remedies to increase weight

Flax seeds – ஆளிவிதைகள் 

PCOD treatment

ஒமேகா-3 கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் PCOD மற்றும் PCOS-ஆல் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை தடுக்கிறது. இது lignan எனப்படும் ஆன்டிஆக்ஸிடண்ட்டை ஏற்படுத்தி உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் நல்ல கருவுறுதலை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது.

ஆளிவிதைகளை முறையாக தினசரி எடுத்துக்கொண்டால் நுண்ணறைகளை குறைத்து முறையான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

Pumpkin seeds-பூசணி விதைகள்

PCOD treatment

பூசணி விதைகளில் உள்ள அதிகப்படியான நன்மைகளை கருத்தில் கொண்டு பெண்களின் மிக சிறந்த தோழி என்று கூறுவார்கள். மெக்னிசியம் நிறைந்த பூசணி விதைகள் உங்கள் தசை பிடிப்பு வலிகளை சரி செய்வதுடன் முறையான மாதவிடாய் சுழற்சியையும் ஏற்படுத்துகிறது. 

இதில் beta-sitosterol என்ற நொதிகள் இருப்பதால் PCOD-யை எதிர்க்கிறது. இது முடி உதிர்தலையும் தடுக்கிறது. இது உங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகிறது.

Sunflower seeds – சூரியகாந்தி விதைகள்

PCOD treatment

சூரியகாந்தி விதைகளில் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலை படுத்தும் 100 வகையான நொதிகள் உள்ளன.

இந்த விதைகளில் உள்ள நொதிகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சீராக்கி மாதவிடாய் வருவதற்கு முன் ஏற்படக்கூடிய வலி, தைராய்டு மற்றும் கர்ப்பம் உண்டான முதல் மூன்று மாதங்கள் ஏற்படக்கூடிய காலை நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

சூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி6 புரதம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது.

Sesame seeds – எள் விதைகள்(PCOD treatment)

Sesame seeds

பொதுவாக இந்தியாவில் எள்ளை உணவில் சேர்க்கும் பழக்கம் அதிகமாக  உடையவர்கள். எள்ளில் பொட்டாசியம், ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் துத்தநாகம், மெக்னீசியம் நிறைந்துள்ளது.

இது குறைவான கலோரிகளை கொண்டுள்ளதால்  உங்கள் எடையை குறைக்க நல்ல உதவியாக அமைகிறது. இது ஆயுர்வேதத்தில் வெப்பத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுகிறது என்று கூறுகின்றனர்.

Peanuts – நிலக்கடலை (PCOD treatment)

peanuts

நிலக்கடலை அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. இது  உடலுக்கு தேவையான அதிகமான கொழுப்பை தரக்கூடியது. வேர்க்கடலையை தினசரி சாப்பிடுவது நல்ல கொழுப்பை அதிகரிப்பதுடன் தீங்கு விளைவிக்கும் ஆண்ட்ரோஜன் அளவையும் குறைக்கிறது. இது PCOD பிரச்சனைக்கு பங்களிக்கும் பிற ஹார்மோன் மாற்றங்களையும் சரி செய்கிறது.

How many nuts and seeds do you need?

உங்கள் ஆரோக்கியமற்ற அதிகப்படியான உணவு முறைகளே PCOD ஆரம்பத்திற்கான முக்கிய காரணமாகிறது. ஆகையால் உங்கள் உணவு முறைகள் இயற்கையான முறையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் தினசரி நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்வது ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதே நேரத்தில் நட்ஸ் மற்றும் விதைகளை அளவோடு எடுத்துக் கொள்வதும் அவசியம்.

இவற்றை தின்பண்டங்களில் சேர்த்தும் சாப்பிடலாம். தினசரி ஒரு கைப்பிடி அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க: 7 Iron-rich foods that will boost your immune system

முக்கிய குறிப்பு :  இந்த தளத்தில் வரும் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்வதற்கு மட்டும், பயன்படுத்துவதற்கு அல்ல. நீங்கள் நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Halim seeds benefits in Tamil

Halim seeds benefits in Tamil

மக்கள்  அனைவரும் superfoods மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். சியா விதைகள், பூசணி விதைகள்,ஆளி விதைகள்,சப்ஜா விதைகள் இவைகளின் பட்டியலில் சாலியா விதையும் முக்கிய இடம் பிடிக்கிறது. 

சாலியா விதையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இந்த சாலியா விதை ஆங்கிலத்தில் garden cress seeds என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த விதைகளில் வைட்டமின் சி, ஏ, இ, இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சாலியா விதைகள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். 

Halim seeds benefits for anemia

ஹாலிம் விதைகளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது.இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. எனவே இந்த விதைகள் உட்கொள்வதால் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.

ஒரு தேக்கரண்டி சாலியா விதையில் 12 மில்லிகிராம் இரும்பு சத்து நிறைந்துள்ளது. 

உங்கள் உடலில் தாது உறிஞ்சுதலை அதிகரிக்க இரும்பு சத்துடன் வைட்டமின் சி தேவைப்படுகிறது. சாலியா விதையில் வைட்டமின் சி யும் நிறைந்துள்ளது.

Increase breast milk production

ncrease breast milk production

சாலியா விதையில் இரும்பு சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்துள்ளதோடு  galactagogue பண்புகளும் உள்ளன. இது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பராமரிக்கவும் galactagogue உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதற்கு சாலியா விதைகளை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் பயனளிக்கும்.

இதையும் படிங்க: Pumpkin Seed Benefits for health | பூசணி விதைகளில் உள்ள நன்மைகள் | ஆண்மையை அதிகரிக்கும்  பூசணி விதைகள்

Halim seeds benefits for menstrual cycle

பெண்களின் ஆரோக்கியத்திற்கும் தாய்மை அடைவதற்கும் மாதவிடாய் சுழற்சி என்பது மிகவும் முக்கியம். estrogen harmon ஐ பின்பற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சாலியா விதைகளில் உள்ளன. எனவே சாலியா விதைகளை உட்கொள்ளும் பெண்களின் ஹார்மோன்கள் சீரமைக்கப்பட்டு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இயல்பாக்கப்படுகிறது. இது ஒரு இயற்கையான வழிமுறையாகும்.

Halim seeds benefits for weight loss

Halim seeds benefits for weight loss

சாலியா விதைகளில்  புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இவற்றை உட்கொள்வதால் பசியின்மை மற்றும் அதிகமான உணவுகளை உட்கொள்ளும் எண்ணங்களை தவிர்க்கிறது.இதில் உள்ள புரத சத்து உடலின் தசைகளை பராமரிக்க உதவுகிறது. மற்றும் இயற்கையான முறையில் எடையை குறைக்க உதவுகிறது.

Halim seeds benefits for boosting immunity

இந்த விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் சி, ஏ, இ மற்றும் போலிக் அமிலம்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. விதைகளின் antimicrobial பண்புகள் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவைகள் வராமல் தடுக்கிறது.

Halim seeds benefits for constipation

சாலியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக்குகிறது. இவை மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

keep in mind

இந்த விதைகளை உட்கொண்டால் உங்கள் ஊட்டச்சத்தினை அதிகரிக்கும்.ஆகையால் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். நீங்கள் விதைகளை வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டால் போதுமானது.

How to consume halim seeds

ஒரு தேக்கரண்டி சாலியா விதைகளை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடலாம்.

விதைகளை சாலட்டில் கலந்தும் சாப்பிடலாம்.

இனிப்பு பண்டங்களில் விதைகளை இடித்து கலந்து சாப்பிடலாம்.

Pumpkin Seed Benefits for health

Pumpkin Seed Benefits for health

பூசணி விதைகள் பலநூறு ஆண்டுகளாக நம் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .இது சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் புழு தொற்று இவைகளுக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது.

pumpkin seed களில் அதிகமான மெக்னீசியம், துத்தநாகம், புரதம் மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

பூசணி  விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அவற்றை சாப்பிட வேண்டிய அவசியத்தை பற்றி பாப்போம்.

Benefits of pumpkin seeds

Pumpkin seeds benefits for heart

பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துகள் மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது இந்த விதைகளில் monounsaturated கொழுப்பு  அமிலங்கள் உள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

பூசணி விதைகளில்  உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்த(blood pressure)அளவை சீராக வைக்கிறது.

pumpkin seeds benefits for better sleep

இந்த பூசணி விதைகளில் serotonin உள்ளதால் இயற்கையான தூக்கத்திற்கு உதவுகிறது. இவற்றில் உள்ள tryptophan என்ற அமினோ அமிலமும் அதிகமாக உள்ளது. இந்த அமிலங்கள் செரோடோனினாக மாற்றப்பட்டு உங்கள்  ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவி புரிகிறது.

நீங்கள் தூங்குவதற்கு முன் சில பூசணி விதைகளை சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தை பெற உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க :
7 Iron-rich foods can boost your immune system

Anti-inflammatory

பூசணி விதைகளில் Anti-inflammatory பண்புகள் உள்ளன. இவை கீழ்வாதம் வலியை குறைக்க உதவுகிறது. pumpkin seed மூட்டு வலியை குணப்படுத்த எளிய முறைகளில் வீட்டு மருந்தாக பயன்படுகிறது.

Pumpkin use for immunity boost

இந்த விதைகளில் அதிகப்படியான antioxidants மற்றும் phytochemicals உள்ளதால் உங்களின் நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. பூசணி விதைகளை எடுத்துக் கொள்வதால் நோய்வாய்ப்படும் நிலையை குறைக்கிறது.

Good for prostate health

ஆய்வுகளில் பூசணி விதைகளில் துத்தநாகம் அதிகம் உள்ளதாகவும், இது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க பெரிதும் உதவியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. prostate சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

பூசணி விதைகளில் DHEA (Di-Hydro epiandrosteenione) உள்ளதால் prostate cancer அபாயத்தை குறைக்கிறது.

Good for Diabetics

இந்த விதைகள் oxidative stress ஐ குறைக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இந்த விதைகளில் செரிமானத்திற்கான புரத சத்து அதிகம் உள்ளதால் ரத்த சர்க்கரை அளவு குறைக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க : weight gain diet plan: follow these home remedies to increase weight

Pumpkin seeds benefits for weight loss

உலகத்தில் பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்வை விரும்புகின்றனர். இதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துகள் பசியை குறைக்கிறது. விதைகளில் அதிகப்படியான நார்ச்சத்து அதிகம் சாப்பிடும் எண்ணங்களை குறைக்கிறது.

Improve hair growth

பூசணி விதைகளில் உள்ள அமினோ அமிலங்கள் உங்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. விதையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு அதிக பயனளிக்கின்றது. தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Rich in Antioxidants

பூசணி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகம் உள்ளன. இவை வீக்கத்தை குறைகின்றன.

உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் free radicals லிருந்து பாதுகாக்கிறது. இந்த விதைகள் உங்களின் பல்வேறு வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது.

Reduce the risk of certain cancer

பூசணி விதைகள் சாப்பிடுவதால் வயிறு, நுரையீரல், மார்பகம், பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. 

மாதவிடாய் நின்ற பெண்கள் பூசணி விதை அதிகம் எடுத்துக் கொண்டால் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

Improve sperm quality

ஆண்களின் துத்தநாக சத்து குறைபாடு உயிரணுக்கள்  குறைபாட்டை ஏற்படுத்தும். பூசணி விதையில் துத்தநாகம் அதிகம் இருப்பதால் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

7 Iron-rich foods that will boost your immune system

Iron-rich foods

உலகெங்கிலும் COVID-19 வந்ததிலிருந்து மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது இயற்கையான ஆரோக்கிய உணவு முறைகளும், வைட்டமின்கள் மற்றும்  தாது சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் காரணமாக அமைகிறது.

உங்களின் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் உடலில் இரும்பு (hemoglobin) சத்தை அதிகரிக்கும். உடலில் இரும்புச் சத்துதான் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.

இதனால் உடலில் நோயெதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவேதான் உங்கள் உடலுக்கு இரும்பு சத்து மிகவும் இன்றியமையாததாகும். 

7 Iron-rich foods can boost your immune system

Iron-rich foods

1. Spinach

கீரை வகைகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்வது மிக அவசியமாகிறது. ஏனென்றால் கீரை வகைகளில் அதிகப்படியான ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் இரும்பு சத்து ஏராளமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முருங்கை கீரை, பசலை கீரை, கரிசாலை போன்ற கீரை வகைகளில் அதிகப்படியான இரும்பு சத்து அடங்கியுள்ளது. கீரைகளில் அதிகப்படியான antioxidant and beta carotene நிறைந்துள்ளது.

2. Dry Fruits

iron rich foods

உங்கள் உடம்பில் இரும்புச் சத்தை அதிகரிக்க உலர் பழவகைகள் திராட்சை, பாதாம், பிஸ்தா, அக்ரூட் , அத்திப்பழம், பேரிச்சை  இவைகளை சேர்த்து கொள்வது அவசியமான ஒன்று. இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகிறது.

3. Legumes

பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் வகைகள் அனைத்தும் இரும்பு சத்து நிறைந்தவையாக இருக்கின்றன. இவை பொதுவாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும்  இதய நோய்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கிறது.

4. Potatoes

வேகவைத்த உருளைக்கிழங்கில் உங்களின் உடம்புக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்பு சத்தில் 10% கிடைக்கின்றது.

5. Soya

100 gram சோயாபீன்ஸ்ல் 15.7 mg இரும்பு சத்து நிறைந்துள்ளது. சோயாவில் புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் பி 1 போன்றவைகளும் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6. Chicken

நாட்டு கோழி கல்லீரலில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. மற்ற இறைச்சிகள் விரும்பினால் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவைகளையும் சாப்பிடலாம்.

7. Fish

பொதுவாக கடல் உணவுகளில் குறைவான கலோரிகள் மற்றும் இரும்பு சத்து, புரதச் சத்தும் நிறைந்து உள்ளன. சில முக்கிய மீன் வகைகளான நெத்திலி, மத்தி மீன், கானாங்கெளுத்தி மீன் வகைகள் இரும்பு சத்து மிகவும் நிறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.கடல் உணவுகளான மீன்களில் ஒமேகா 3 நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் இவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.